[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • உரிய பாதையில் உரிமையைத் தேடு...
Page 1 of 1

உரிய பாதையில் உரிமையைத் தேடு...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 4th, 2017, 6:47 am
by அ.இராமநாதன்


தேம்பித் தேம்பி நித்தம்
ஏங்கும் பெண்ணே - நீ
தேய்பிறையோ வளர்பிறையோ
சொல்லு கண்ணே!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
நசுக்கும் உலகில் - நீ
எடுத்துக் கொண்ட உரிமைகளை
எண்ணிப்பாரு கண்ணே!
-
கழனி செல்ல உரிமையாம்
கல்வி கற்க உரிமையாம்
தொழில் செய்ய உரிமையாம்
தொட்டதெல்லாம் பொன்னாகும்
காசுக்கான உரிமையெல்லாம்
கணக்காவே நடக்குது
கல்யாண பேச்சில் மட்டும் நீயா
சொன்னாக் கொதிக்குது.
-
பிள்ளைப்பெறும் இயந்திரமாய்
பேறுகால வதையுடன்
சீர் செனத்தி வரிசையாய்
திரும்பத் திரும்ப முட்டுது.
கிணத்துமீனை குளத்துமீனாய்
மாற்றிப் போடறான்
மீறிப்போனா ஓடைமீனாய்
ஓடி ஓடி களைச்சிப் போகிறாய்...
-
-------------------------

-நா.சுப்புலட்சுமி
கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து