[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • வெட்கம் அணிகிறாள்
Page 1 of 1

வெட்கம் அணிகிறாள்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:09 am
by அ.இராமநாதன்
உன்னை உனக்கு
முதலில் அறிமுகம்
செய்தது
நான்தான்...
-
------------------
-
என் பார்வைகளின்
பாரம் தாங்காமல்
வெட்கம்
உன்னை அணிந்து கொண்டது
-
---------------------
-
கண்கள் கொண்டு
நீ காயம்
செய்கிறாய்...
-
--------------------
-
நம்மை அணிந்து
கொண்டு
நிர்வாணம்
மறைத்தோம்
-
-----------------------

Re: வெட்கம் அணிகிறாள்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:09 am
by அ.இராமநாதன்
நமக்குள் வேண்டாம்
என்பது
அவசியம் வேண்டும்
என்று அர்த்தம்...
-
--------------------
-
நான் ஒளிந்து
கொள்ள
எத்தனித்தும்
இடமில்லை
பிரபஞ்சம் முழுவதும்
உன் பார்வை ஒளி...
-
------------------
-
உன் விழியோரம்
கசியும்
ஓரிரு கண்ணீர்த்
துளிகளில்தான்
என் முழு முகவரியும்
இருக்கிறது...
-
----------------
-
எனக்குத் தெரியாமல்
என்னுள் நுழைந்து
என்னைத்
தொலையச் செய்தாய்!
-
---------------------
-வி.அமர்நாத்
கல்கண்டு