[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • உதிர்வது மலர்வதற்குத்தான்!
Page 1 of 1

உதிர்வது மலர்வதற்குத்தான்!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 29th, 2017, 8:46 pm
by அ.இராமநாதன்
சவம் சென்ற சாலை…
சிதறிக் கிடந்த
பூக்களின்
முணுமுணுப்பை
எந்த கால்களும் கேட்கவில்லை…
யாரோ இறந்ததற்கு
எங்களை ஏன்
கொன்றீர்கள் என்பதை!

உங்களுக்கு மணமானாலும்
நீங்கள் பிணமானாலும்
நோயானாலும், குணமானாலும்
ரணமாவது நாங்கள் தான்!

பாலியல்
தொழிலாளியின்
தலையில்
அழகாகிறோம்!

அரசியல்வாதியின்
கழுத்தில்
அழுக்காகிறோம்!

எங்கள் வர்ணங்கள்
வேறு என்றாலும் அதில்
ஜாதி கிடையாது
எங்கள் நறுமணம்
நூறு என்றாலும் அதில்
போலி கிடையாது!

எங்களை மதிக்காமல்
மிதிப்பவர்களே…
நீங்கள் இறந்தால் மீண்டும்
பிறப்பதில்லை!

நாங்கள் உதிர்வதே
மலர்வதற்குத்தான்!

—————————
— நிஷாத் பானு, சென்னை.

வாரமலர்

Re: உதிர்வது மலர்வதற்குத்தான்!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 1st, 2017, 11:13 pm
by கரூர் கவியன்பன்
உங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...

Re: உதிர்வது மலர்வதற்குத்தான்!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:00 am
by அ.இராமநாதன்
:-nan