[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உன்னுடன் வரும் எனது பொழுது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.

உன்னுடன் வரும் எனது பொழுது

படிக்காத இடுகை [Unread post]by அ.இராமநாதன் » ஏப்ரல் 6th, 2017, 4:02 pm

நம்மை
மழை நனைத்த பொழுது
இன்னும்
நீர்த்திவலைகளாக
மனதில் படிந்திருக்கிறது

.

புத்தக அடுக்குகளிலிருந்து
தலை நீட்டித் தெரியும்
நான்காய் மடிந்த காகிதம்
முழுமையாய் சொல்கிறது
உனது துயரங்களை

.

விம்மியடங்கும் ஓசைகள்
மெலிதாய் எழுகின்றன

.

கடிதம்
புத்தகத்தினுள் வைக்கப்பட்டவுடன்
மழை தொடங்கிவிட்டது

.

இங்கு
வேறு யாருமில்லை
புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட
எனது விரல்களில்
மழைத்துளி பட்டுத் தெறிக்கிறது

மழை நனைத்துக் கொண்டிருக்கிறது
மரங்களை
செடிகளை
பூக்களை
பறவைகளை
கூடவே
உன்னையும்
உன்னுடன் வரும் எனது அன்பையும்
.

நீ
கொண்டு செல்கிறாய்
நம்மை நனைத்த மழையையும்
அந்த பொழுதையும் .

————————-

………..சக்தி ஜோதி
எனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து
அ.இராமநாதன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 46
இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
மதிப்பீடுகள்: 38
இருப்பிடம்: chidambaram
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment

Return to இரசித்த கவிதைகள் (Desire Stanza)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]