[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 12:03 pm

Image

வாய்க்க வரப்போரம்
வண்டி உருளும்
ஒத்தையடி பாதையோரம்
அள்ளி முடிஞ்ச கொண்டையிலே
அரை மனச கொண்டு போறவளே...

அன்னனடையழகி
அமுதவாய் மொழியழகி
ஆச மச்சான் கேக்குறேன்
அலுங்காம குலுங்காம
சொல்லிபுடு...

அத்தன அழகையும்
எங்க பதுக்கி வச்சிருக்க...

முந்தான சொருகையிலே
கையை முத்தமிடும்
இடுப்போரமா..?

மூச்சு முட்டி
முன்னழக கூட்டி
என்ன முறைச்சு பாக்குற
முசகுட்டி காது மடிப்போரமா..?

கர கட்டுன கண்டாங்கி சேல
கெண்டைக்கால காட்டுதடி
இறுக்கி புடுச்ச மாராப்பு
ஏ இறுமாப்ப கூட்டுதடி
நீ பொட்டு வச்ச இடத்துல
முத்தமிட தோணுதடி
உன்ன மாரோடு சாச்சுகிட்டு
மாந்தோப்பு பூந்தோப்புன்னு
சுத்திவர மனம் ஏங்குதடி

ஆச மச்ச கேக்குறேன்
கருப்பு நிற அழகி
என் கண்ணக்கரு விழியழகி
காதோரம் சொல்லிபுடு
என் கனவையெல்லாம் தீத்துபுடு

அத்தன அழகையும் எங்க
பதுக்கி வச்சிருக்க

மூச்சு விடும் இடத்துல
மூட்ட கட்டி வச்ச
முன்கோவத்துலையா...
இல்ல...
படர்ந்த கன்னத்துல
பாய்போட்டு படுத்திருக்குற
பசியைத் தூண்டும்
மச்சத்துலையா..

ஐயோ...
தலையெல்லாம் சுத்துதே
ஆகாசம் பூலோகம் அடி மனச கிளருதே

அடக்கி வச்ச ஆசையெல்லாம்
அலங்காரம் பண்ணிக்கிட்டு
அந்தி சாயும் நேரத்துல
ஏரிக்கரை ஓரத்துல
ஆரவாரம் செஞ்சுகிட்டு வருதே..

அடியே...
கருப்பட்டி நிறத்தழகி
பனைவெல்லம் பேச்சழகி
பக்குவமாய் சொல்லுறேன்
பரிசம் தான் போடுறேன்..
பக்கத்துல வந்துபுடு..
உன் ஆசையெல்லாம்
இந்த மாமன் காதுல சொல்லிபுடு..

கடசியா கேக்குறேன்...
அத்தன அழகையும்
எங்க பதுக்கி வச்சிருக்க...

ஒத்தையடி பாதையில
வம்பிழுக்கும்...
கரிகாலன் காலழகா
திருக்க மீனு உடம்பழகா
அய்யனாரு மீசையால
அம்சமான முக அழகா
பொத்திவச்ச மனசுக்குள்ள
ஒ மனச வச்சதால
உடம்பெல்லாம் மனக்குதய்யா
உசுரு உசர உசர பறக்குதய்யா

ஒ நினப்ப மாரப்புக்குள்ள
யாருக்கும் தெரியாம
ஒளிச்சு வச்சதால
ஒ பொண்டாட்டி
அழகுன்னு...
ஊரே சொல்ல
பொசகெட்ட மனசனுக்கு மட்டும்
தெரியாம போனதென்ன..



- கரூர் கவியன்பன்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஜூன் 4th, 2014, 12:05 pm

கடசியா கேக்குறேன்...
அத்தன அழகையும்
எங்க பதுக்கி வச்சிருக்க...
ஒத்தையடி பாதையில
வம்பிழுக்கும்...
கரிகாலன் காலழகா
திருக்க மீனு உடம்பழகா
அய்யனாரு மீசையால
அம்சமான முக அழகா
பொத்திவச்ச மனசுக்குள்ள
ஒ மனச வச்சதால
உடம்பெல்லாம் மனக்குதய்யா
உசுரு உசர உசர பறக்குதய்யா

ஒ நினப்ப மாரப்புக்குள்ள
யாருக்கும் தெரியாம
ஒளிச்சு வச்சதால
ஒ பொண்டாட்டி
அழகுன்னு...
ஊரே சொல்ல
பொசகெட்ட மனசனுக்கு மட்டும்
தெரியாம போனதென்ன..


கடசியா கேக்குறேன்... யாரு இவங்க அப்படின்னு சொல்லிடுங்க கவி கவிதை அருமை அருமை
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 12:10 pm

கடசியா கேக்குறேன்... யாரு இவங்க அப்படின்னு சொல்லிடுங்க கவி கவிதை அருமை அருமை


நீ எப்பப்பா வந்த... பாலா கேட்டாருன்னு எழுதினேன் .அவ்வளவு தான்...

நீ நினைக்குற மாதிரி அந்த நல்ல காரியம் ஒன்னும் நடக்கல...


பாராட்டுக்கு நன்றி பூவன்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 4th, 2014, 4:03 pm

கவி இந்த கவிதையை யாருகிட்ட பாடினீங்க .... சாதரணமா இவ்வளவு அருமையா எழுத முடியுமா என்று தெரியவில்லை.

யாரையோ பார்த்து அழகில் மயங்கி தண்ணி தெளிச்சு எழுப்பி உக்கார வச்சதுக்கு அப்புறம் எழுதியது போல் தெரியுது. உண்மைய சொல்லுங்க .... உங்களுக்கு பொய் பேச தெரியாதுன்னு கோடை பண்பலையில் பேசிக்கிறாங்க :)

கவிதை வெகு அருமை கவி :-clp :-clp
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜூன் 4th, 2014, 7:48 pm

அண்ணா படத்தை நான் மாற்றிவிட்டேன் ... :-run :-run
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:34 pm

பூச்சரண் wrote:அண்ணா படத்தை நான் மாற்றிவிட்டேன் ... :-run :-run

இந்த மாதிரி வேலையெல்லாம் நல்ல செய்யுங்க..

படத்தை போட்டுட்டு யார் பின்னாடி ஓடுறீங்க :-z
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:40 pm

பிரபாகரன் wrote:கவி இந்த கவிதையை யாருகிட்ட பாடினீங்க .... சாதரணமா இவ்வளவு அருமையா எழுத முடியுமா என்று தெரியவில்லை.

யாரையோ பார்த்து அழகில் மயங்கி தண்ணி தெளிச்சு எழுப்பி உக்கார வச்சதுக்கு அப்புறம் எழுதியது போல் தெரியுது. உண்மைய சொல்லுங்க .... உங்களுக்கு பொய் பேச தெரியாதுன்னு கோடை பண்பலையில் பேசிக்கிறாங்க :)

கவிதை வெகு அருமை கவி :-clp :-clp



அப்படியெல்லாம் நடக்கலை அண்ணா.... நடந்த நல்ல தான் இருக்கும். எங்க முகத்துல நெருக்கமா பாத்தா பாக்குறவங்க மயங்கி கீழே விழுந்திடுறாங்க.. நான் எங்க விழுறேன்...

பாலா கேட்டாருன்னு சும்மா எழுதினேன் அவ்வளவுதான் அண்ணா
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 5th, 2014, 1:37 pm

பாலா கேட்டாருன்னு சும்மா எழுதினேன் அவ்வளவுதான் அண்ணா


சும்மா எழுதியதே எங்களை யம்மா என்று சொல்ல வைத்துவிட்டது :)

கவிதை சூப்பர் :-clp :-clp
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூலை 15th, 2014, 9:29 pm

வேட்டையன் wrote:

கவிதை சூப்பர் :-clp :-clp



நன்றி தங்களுக்கு.... பதிவை பர்ர்க்க கொஞ்சம் மறந்துவிட்டேன்.
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜூலை 15th, 2014, 9:34 pm

அத்தன வரியையும் எங்க வெச்சு இருந்தீங்களோ கவிதை அருமை கவி , :-gd :-gd :-gd
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Next

Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 171 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron