[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.

பொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 17th, 2013, 1:53 am

Image

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதில், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்குகிறது. இங்கு இந்திய அணி பங்கேற்ற 3 டெஸ்டில், 2006ல் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1992, 1997ல் நடந்த டெஸ்ட் போட்டிகள் "டிரா' ஆகின. இம்முறை வெற்றிக்கு முயற்சிக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டிருப்பது புது சோதனையாக அமைந்துள்ளது.
ஸ்டைன், பிலாண்டர், மார்கலின் வேகப்பந்துகள், நாகப்பாம்பு படமெடுப்பது போல திடீரென வீரர்களுக்கு முன்பு உயரமாக எழும். பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தும் பட்சத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் தப்பிப்பது கடினம்.
அனுபவம் இல்லை: அணியின் "டாப்-5' வீரர்களில் முரளி விஜய் (7 டெஸ்ட்), விராத் கோஹ்லி (7), புஜாரா (2) இணைந்து மொத்தமே 16 டெஸ்டில் தான், அன்னிய மண்ணில் பங்கேற்றுள்ளனர். ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் இந்த கணக்கை துவக்கவே இல்லை.
கேப்டன் தோனி, ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவைத் தவிர, அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி என, யாரும் தென் ஆப்ரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை.
மிகவும் கடினம்: இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் கூறியது:
கடந்த 2006 டெஸ்டில் இந்திய அணி இங்கு வெற்றி பெற்றது. அப்போது இருந்த சச்சின் இப்போதில்லை. ஸ்ரீசாந்த் வீணாகி விட்டார். இந்நிலையில், இளம் வீரர்கள் நிலைத்து நின்று பேட்டிங் திறமை வெளிப்படுத்துவது என்பது கடினம்.
அதிகபட்சம் "மூன்று': வானிலையிலும் சற்று ஈரப்பதம் இருப்பதால், பந்துகள் நன்றாக "சுவிங்' ஆகும். இந்திய வீரர்கள் அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பில்லை. முதல் டெஸ்ட் எப்படியும் மூன்று நாட்களுக்குள் முடிந்துவிடும். இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஏற்கனவே வெற்றி பெற்றது போலத்தான்.
ரன்கள் முக்கியம்: ஒருவேளை இதில் இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்து விட்டால், உலகின் வேறெந்த இடத்திலும் நன்றாக விளையாடலாம். துவக்க வீரர்கள் முதல் ஒரு மணி நேரம் சமாளித்து நிலைத்துவிட்டால், இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்களுக்கு ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்கும்.
ஜாகிர் கான், இஷாந்த் சர்மா என, இருவரும் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். இருப்பினும், இது இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கின்றனர் என்பதைப் பொறுத்து தான் அமையும்.
இவ்வாறு கெப்ளர் வெசல்ஸ் கூறினார்.

நன்றி தினமலர்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

படிக்காத இடுகை [Unread post]by சேது » டிசம்பர் 20th, 2013, 4:38 pm

பொங்கும் ஆனா எழுமான்னு தெரியல :roll:
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: பொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 20th, 2013, 4:46 pm

சேது wrote:பொங்கும் ஆனா எழுமான்னு தெரியல :roll:


பொங்குமா ? நீங்கள் சொல்வது பொங்கலை தானே அது இன்னும் நாள் இருக்கு :lol: :lol: :lol: :lol: :lol:
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

படிக்காத இடுகை [Unread post]by தனா » டிசம்பர் 20th, 2013, 9:27 pm

பூச்சரத்தின் புதல்வரே எனக்கு ஒரு சந்தேகம். பொங்குமா என்ற கேள்வியை அவர் கேட்டுள்ளார் அது பாட்டிலில் நிரப்ப பட்ட குளிபானங்களையா :roll: :roll:
பயனர் அவதாரம் [User avatar]
தனா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 111
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm
மதிப்பீடுகள்: 114
Has thanked: 0 time
Been thanked: 2 முறை

		
		

		
Print view this post

leave a comment


Return to விளையாட்டுகள் (Sports)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]