by பூச்சரண் » மார்ச் 15th, 2014, 2:11 pm
மாயமான மலேசிய விமானத்தின் விமானி தற்கொலை செய்ய நடந்த விபரீதமா? என விசாரணை நடக்கிறது.
விமான பயணம் என்பது பாதுகாப்பை மிக மிக உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். பறக்கும் போது அதன் ஒவ்வொரு அசைவும், வேகமும், திசையும், உயரமும் கம்ப்யூட்டர்களால் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
புறப்பட்ட இடத்தில் இருந்து போய்ச் சேரும் வரை பறப்பது, இறங்குவது, என அதன் செயல்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். கம்ப்யூட்டர் இடும் கட்டளைப் படி விமானம் செயல்படும். இதில் கடுகளவு கூட தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை.
கம்ப்யூட்டர் கட்டளைப்படி விமானம் பறக்கிறதா? என்பதை கண்காணிப்பது மட்டுமே விமானிகளின் வேலை. விமானிகள் எப்போதும் தரைகட்டுப்பாடு நிலைய நிபுணர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அவ்வப்போது தகவல் தெரிவித்தபடியே இருவரும் தொடர்பில் இருப்பார்கள்.
இது போல் விமானத்தில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் தரைக் கட்டுப்பாட்டு ரேடாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். அது விமானம் செல்லும் பாதை மற்றும் தகவல்களை கண்காணிக்கும்.
கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக 8–ந் தேதி அதிகாலை 1.21 மணிக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எந்திர கோளாறு அல்ல. மனிதனே ஏற்படுத்திய கோளாறு என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏதாவது கோளாறோ ஆபத்தோ ஏற்பட்டு தானாகவே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் விமானம் உடனே விபத்துக்குள்ளாகி எங்காவது விழுந்து விடும். ஆனால் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் விமானம் பல மணி நேரம் பறந்து இருக்கிறது. இது விமானத்தின் செயல்பாடுகளில் மனிதனின் குறுக்கீடு ஏற்பட்டு இருப்பதையே காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
விமானம் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்கான எரிபொருளை விட பல மடங்கு அதில் நிரப்பப்பட்டு இருக்கும். அது ஆபத்து காலங்களில் விமானத்தை வேறு இடத்துக்கு திருப்ப பயன்படுத்தப்படும்.
எனவே அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகளில் ஒருவரோ அல்லது பயணிகளில் தொழில் நுட்பம் தெரிந்த யாராவது ஒருவரோ விமானத்தின் தகவல் தொடர்புகளை அனைத்து வைத்து விமானத்தை கடத்த முயற்சி செய்து இருக்கலாம் அல்லது விமானியே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்காக பயணிகளுடன் விமானத்தை கடலுக்குள் செலுத்தி மூழ்கடித்து விபரீத முடிவை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கடலுக்குள் முழு வேகத்தில் செலுத்தும் போது அது ஆழ்கடலுக்குள் புகுந்து புதையுண்டு இருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் அனுபவம் மிக்க ஒருவருடன் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் விமான கடத்தல் கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை மலர்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
---மாவீரன் நெப்போலியன்---