[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு - Page 2 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 15th, 2014, 2:14 pm

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் - மர்மம் நீங்கியது....!!
239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூருகின்றன.
கடத்தலின் நோக்கம் :
உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில்வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோல் கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர்.
அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர்.
அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி இரு நாட்டு அரசாங்கமும் தெளிவு படுத்தும் என மலேசிய மற்றும் சீன ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம்...
அறிந்துகொள்வோம் , அறியவைபோம்
முகநூல்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

மெக்சிகோவில் சட்டவிரோத சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 15th, 2014, 2:19 pm

Image


அமெரிக்காவின் எல்லை நாடான மெக்சிகோவில் போதை மருந்துக் கடத்தல்களும் அது தொடர்பான வன்முறைக் கடத்தல் கும்பல்களும் சர்வசாதாரணமாகக் காணப்படும் ஒரு விஷயமாகும். இங்கிருந்து அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்படும் போதைப் பொருட்களை கொண்டு செல்ல இந்நாட்டில் கடத்தல் கும்பல்களால் சட்டவிரோதமாக பல சுரங்கப்பாதைகள் போடப்பட்டுள்ளன. காவல்துறையும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு இவற்றைக் கண்டுபிடித்து அழித்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டி வரும் டிஜூவானா பகுதியில் பல்வேறு அளவுகளுடனும், சிறந்த தொழில்நுட்பங்களுடனும் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றில் காவல்துறையினர் எட்டு டன் எடைகொண்ட மரிஜுவானா போதைப் பொருளையும், 148 கிலோ கோகைனையும் கைப்பற்றினர். சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு போடப்பட்டிருந்த இந்தப் பாதை மின்சார விளக்கு வசதிகளையும், காற்றோட்டத்திற்காக ஜன்னல்களையும் கொண்டிருந்தது. சில பாதைகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் மக்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் டிஜூவானா நகரின் குடியிருப்புப் பகுதியில் ஆள்கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலை முன்னிட்டு நேற்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கட்டப்பட்ட ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்ததோடு மூன்று கடத்தல் குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். இந்தத் தகவலைத் தெரிவித்த தேசிய இடம்பெயர்தல் நிறுவனம் (நேஷனல் மைக்ரேஷன் இன்ஸ்டிடியுட்) மற்ற விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

மலேசிய விமானம் மாயம்: பைலட் வீட்டில் போலீசார் விசாரணை

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 15th, 2014, 9:54 pm

Image


மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் ஒரு வாரம் ஆகியும், அதன் இருப்பிடம் பற்றிய உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. உலக நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், விமானத்தில் இருந்த யாரோ ஒருவர், தகவல் தொடர்பு சாதனங்களை திட்டமிட்டு செயலிழக்கச் செய்திருப்பதாக கூறினார்.

கடைசியாக காலை 8.11 மணிக்கு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு பதிவானதை குறிப்பிட்ட பிரதமர், விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்ட பின்னர் ஏழரை மணி நேரம் விமானம் பறந்திருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்தார். மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் மீது விசாரணைக்குழுவினர் கவனம் செலுத்துவார்கள் என்றும் அறிவித்தார்.

அவர் அறிவித்த சில நிமிடங்களில், விமான கேப்டன் ஜகாரி அகமது ஷா வீட்டிற்கு மலேசிய போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணையைத் தொடங்கினர். ஷா ஆலமில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று வரும் இந்த விசாரணையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

18365 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் பெற்ற ஜகாரி (வயது 53), விமான பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

எம்.எச்.370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போனதையடுத்து அவரைப்பற்றி செய்தி வெளியானது. அத்துடன், அந்த விமானத்தின் மாதிரி வடிவம் அவரது வீட்டில் இருந்தது பற்றி பல்வேறு கேள்விகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

மாயமான விமானத்தை கடத்தி இந்தியாவை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 16th, 2014, 2:37 pm

Image
கோலாலம்பூர்,

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியை இந்திய விமானப்படை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. விமானம் சென்ற திசையை துல்லியமாக கண்டறிந்த பின் மீண்டும் தேடுதல் பணியை தொடர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி இருக்கலாம் எனறும் இந்த விமானத்தின் மூலம் அவர்கள் இந்தியாவை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விமானத்தின் பைலட் மற்றும் இணை பைலட் ஆகிய இருவரின் வீடுகளையும் சோதனையிட்ட பின் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

மாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம்; ரேடார் பதிவுகள் தெரிவிக்கிறது

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 16th, 2014, 2:39 pm

Image


கோலாலம்பூர்,

மாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம் செய்துள்ளது என்று ரேடார் பதிவுகள் தெரிவிக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சி இன்று (வெள்ளிக்கிழமை) 7–வது நாளாக தொடர்கிறது. 12 நாடுகள் விமானங்களையும், கப்பல்களையும், செயற்கைக்கோள்களையும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியும் சிறிதும் பலன் இல்லை.
விமானம் விபத்தில் சிக்கியதா, கடத்தப்பட்டதா, நாசவேலையில் சிதைக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் உலக நாடுகள் எல்லாம் தவிக்கின்றன.

இருப்பினும் வியட்நாமில் ‘பு குவாக்’ தீவிற்கு 153 மைல் தெற்கே அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி விட்டதாக வெளியான முதல்கட்ட தகவலின் அடிப்படையில் 12 நாடுகளின் 42 கப்பல்கள், 39 விமானங்கள் அதைத் தேடி வருகின்றன. இவற்றில் சீனாவின் 8 கப்பல்கள், 3 விமானங்கள், 10 செயற்கைக்கோள்களும் அடங்கும்.

இதற்கிடையே மாயமான விமானம் கடைசியாக ரேடார் திரையில் தோன்றியதற்கு பிறகு சுமார் 5 மணி நேரம் வானில் பறந்திருப்பதாக 2 வல்லுனர்களது தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகை ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ கூறி உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையையோ, இந்திய பெருங்கடல் அல்லது அரபிக்கடல் பகுதியில் உள்ள இடத்தையோ சென்றடைந்திருக்க முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக, விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னர் மலாக்கா ஜலசந்திக்கு மேல பறந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் மறுக்கப்பட்டன.

முரண்பட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாயமன மலேசிய விமானத்தை தேடும் பணி இந்தியப் பெருங்கடல் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அந்தமான் கடல் பகுதிக்கு கப்பலை அனுப்பியுள்ளது. விமானம் இந்திய பெருங்கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து அமெரிக்கா, விமானம் தேடலை மேற்கு பகுதிக்கு மாற்றியுள்ளது. இந்தியாவும் அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடி வருகிறது.

அமெரிக்கா, கடற்படையின் நெடுந்தொலைவு ரேடார் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் உள்ள பி-3சி ஓரியன் கண்காணிப்பு விமானம் மூலம் அந்தமான் கடல் பகுதியில் மலாக்கா ஜலசந்திக்கு மேற்கு பகுதியில் மாயமான விமானத்தை தேடும் பணியினை தொடங்குகிறது.
அமெரிக்காவின் பி-3சி ஓரியன் விமானம் விரைவில் மலாக்கா ஜலசந்திக்கு மேற்கு பகுதியான அந்தமான் பகுதியில் விமானத்தை தேடும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாயமான மலேசிய விமானம் முன்னதாக மலாய் தீபகற்பத்தின் மேலே அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம் செய்தாதாக இராணுவ ரேடார் கண்காணிப்பு பதிவுகள் தெரிவிப்பதாக விசாரணை அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

மாயமான மலேசிய விமானம்: தேடும் பணியை நிறுத்தியது இந்தியா

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 16th, 2014, 2:40 pm

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7–ந்தேதி மாயமாகிவிட்டது. அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரிய வில்லை.மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும் விமானம் பற்றிய தகவல் தெரியவில்லை.தென் சீன கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில் அந்தமான் நிகோபர் பகுதியில் விழுந்திருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்தது.

எனவே, தேடும் பணியில் இந்தியா உதவியை மலேசியா நாடியது. அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6 போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம் அந்தமான் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.அங்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் இந்திய கடற்படை, விமானப்படை மற்றும் கடல் ரோந்து படையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மாயமான விமானம் கடத்தட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், விமானத்தின் தெடர்பு திட்டமிட்டே துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, விமானத்தை தேடும் பணியை இந்திய கடற்படை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தகவலை தெரிவித்த இந்தியா ராணுவ செய்தி தொடர்பாளர் ஹர்மீத் சிங் ,விமானத்தை தேடும் பணி முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மலேசியாவிடம் புதிய வழிமுறைகளுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 17th, 2014, 9:09 am

கஜகஸ்தானை நோக்கி 7 மணி நேரம் பறந்த மலேசிய விமானம்?

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தீவிரமாக வலுத்து வருகிறது. இதனால், கஜகஸ்தான், துர்க்மேனிஸ் தான் பகுதிகளில் விமானம் தேடப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த வாரம் சனிக்கிழமை சீன தலைநகர் பீஜிங்குக்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் புறப்பட்ட விமா னம், நடுவானில் திடீரென மாயமாகி விட்டது. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடியோ தொடர்பை விமானம் இழந்தது. இதனால், தெற்கு சீன கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்று முதலில் தேடப்பட்டது. அந்த பகுதியில் விமானம் விழுந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால், இந்திய பெருங்கடல், வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் விமானம் தேடப்பட்டு வருகிறது.

இதில் மலேசியா, சீனா, வியட்நாயம், சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், எந்த பலனும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில், விமானத்தை பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோலாலம்பூர் விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பிறகு, மலேசிய விமானம் ஏழரை மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் நேற்று தெரிவித்தார்.

செயற்கைக்கோள் ரேடார் மற்றும் ராணுவ ரேடார்களில் விமானம் பறப்பது பதிவாகி இருக்கிறது. விமானத்தில் இருந்த யாரோ ஒரு மர்ம மனிதன், விமான தகவல் தொடர்பு சாதனங்களை வேண்டுமென்றே திடீரென அணைத்துள்ளான். அதன் பிறகு அந்த விமானம், வந்த வழியே மீண்டும் திரும்பி இருக்கிறது. பின்னர். மேற்கு பக்கமாக சென்று, வடமேற்கு திசையை நோக்கி பறந்துள்ளது.

எனவே, வடக்கு பகுதியில் உள்ள கஜகஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் எல்லை பகுதிகளிலும், தெற்கு பகுதியில் இந்தோனேஷியா முதல் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதி வரையில் தேடுதல் பணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தகவல்களின் மூலம், விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் மேலும் வலுத்து வருகிறது. ‘‘மலேசியா - வியட்நாம் வான் கட்டுப்பாட்டு எல்லைக்குள் விமானம் பறந்தபோது, அதன் தகவல் தொடர்பு சாதனங்கள் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளன. அதாவது, விமானத்தில் இருந்த யாரோ ஒருவரால் அது வேண்டும் என்றே அணைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு விமானம் திசை திருப்பப்பட்டு பறந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் கிடைத்த புதிய தகவல்களால் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, விமானத்தில் சென்ற பயணிகள் மற்றும் ஊழியர்கள் பற்றி மீண்டும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இதனால், விமானத்தை தேடும் பணியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ’’ என்றும் நஜீப் கூறினார்.

பைலட் வீட்டில் போலீஸ் சோதனை

காணாமல் போன மலேசிய விமானத்தின் பைலட் ஜகாரியா அகமது ஷாவின் (52) வீட்டில் மலேசிய போலீசார் நேற்று சோதனை நடத்தினர். விமானத்தில் சென்ற பயணிகள், ஊழியர்கள் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக மலேசிய பிரதமர் கூறிய சிறிது நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஜகாரியாவின் வீட்டில் விமான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சில கருவிகள் கைப்பற்றப்பட்டன. இருப்பினும், அது சாதாரண விஷயம்தான் என்று மலேசிய ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி அகமது ஜவ்காரி கூறினார்.
45,000 அடி உயரத்தில் பறந்தது

கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, மலேசியாவின் பினாங், மலாய் தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளின் மீதும் விமானம் பறந்திருக்கிறது. பின்னர், 45 ஆயிரம் அடி உயரத்துக்கு சென்று பறந்துள்ளது. திடீரென 23 ஆயிரம் அடிக்கு கீழ் வந்தும் பறந்துள்ளது. இவை இரண்டுமே இந்த விமானம் பறப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட உயரங்கள் கிடையாது. அதிக உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்தவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். செயற்கைக்கோள் ரேடார்களிலும், மலேசிய ராணுவ ரேடாரிலும் விமானத்தின் இந்த பயணங்கள் பதிவாகி இருக்கின்றன. இவ்வளவு உயரத்தில் தங்கள் வான் எல்லையில் எந்தவொரு தகவலும் இல்லாமல் விமானம் பறந்தபோதும், மலேசிய விமானப்படை அதை ஏன் வழிமறிக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அது வர்த்தக விமானமாக தெரிந்ததால், அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி-dinakaran.com
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 17th, 2014, 9:10 am

மலேசிய விமானத்தை பைலட்டே கடத்தினாரா? மலேசிய அரசு விசாரணை

காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி காணாமல் போன அந்த விமானத்தின் பயணத்தை துவக்குவதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில் குறிப்பிட்ட அந்த விமானி கலந்து கொண்டதாக மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர். நேற்று தலைநகர் கோலாலம்பூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து விமானத்தை கட்டுப்படுத்த பயன்படும் சைமுலேட்டர் என்ற கருவியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதைக் கொண்டு விமானத்தை எப்படி காணாமல் போகவைப்பது என பயிற்சி எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

விமானத்தை கண்டறியும் முயற்சியில் 25 நாடுகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானத்தை அதன் சுற்றுப் பாதையிலிருந்து மாற்றி அந்தமான் கடற்பகுதியில் பறக்கும் வகையில் ஜஹாரி செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அந்த விமானத்தை எங்காவது மறைவிடத்தில் தரையிறக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதால் அந்நாட்டு அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட கடந்த எட்டு நாட்களாக இந்த விமானம் காணாமல் போனதிலிருந்து விக்கிரமாதித்தன் கதைகளில் வருவது போல் பல்வேறு கதைகள் வருகிறதே தவிர விமானத்தை பற்றி நம்பும்படியான தகவல் இது வரை வெளிவரவில்லை என்பதே முற்றிலும் உண்மை.


நன்றி-maalaimalar.com
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 18th, 2014, 12:47 am

என்னென்னமோ சொல்கிறார்கள்........ உண்மை தான் என்னவென்று தெரியவில்லை...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 18th, 2014, 8:39 am

"179 பயணிகளுடன் இறக்கையை இழந்தும் பத்திரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்"

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக கழன்று கீழே விழுந்தது. இதை அறிந்து கொண்ட விமானி, வெகு சாமர்த்தியமாக விமானத்தை ஓட்டியபடி, அட்லாண்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறி, தனது விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, பரபரப்படைந்த அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, ஓடுபாதையை காலியாக்கி, அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி அளித்தனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓடுபாதையின் ஓரத்தில் ஆம்புலன்சையும், தீயணைப்பு வாகனத்தையும் தயார் நிலையில் நிறுத்தி வைத்தனர். ஒரு இறக்கையை இழந்து மூளியாக வந்த விமானத்தை இரவு 7.30 மணியளவில் திறமையாக தரையிறக்கிய அந்த விமானி, பயணிகள் இறங்கும் இடத்தில் பத்திரமாக நிறுத்தியதும் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் கையொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அவரது சாதுர்யத்தால் 179 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேரின் உயிர் தப்பியது. பறக்கும் போது அந்த விமானத்தின் இறக்கை கழன்று விழுந்தது எப்படி? என்பது தொடர்பாக டெல்டா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நன்றி-maalaimalar.com
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment

PreviousNext

Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 76 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]