[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு - Page 3 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 18th, 2014, 9:53 pm

நொடிக்கு நொடி செய்திகள் அருமை
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 19th, 2014, 4:52 pm

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

விமானம் மாயமாகி 11 நாட்களாகியும் அது பற்றிய தகவல் தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்ததா? அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? அல்லது எங்காவது விழுந்து நொறுங்கி விட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே மலேசிய உளவுத்துறை மாயமான விமானம் குறித்து 13 கோணங்களில் விசாரணை நடந்துள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது வித்தியம் பாட்டரியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு அது விமானத்தின் ஏற்றப்பட்டிருந்த சரக்கு பகுதியில் பிடித்து விபத்து இருக்கலாம்.

அல்லது விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் விமானியின் ‘காக்பிட்’ பகுதிக்கு என்று கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம். ஒரு வேளை கடத்தியிருந்தால் அவர்களின் கோரிக்கை என்ன என தெரிய வில்லை.

ஒருவேளை விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால் 35 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் எரிபொருள் (பெட்ரோல்) துகள்கள் கடலில் மிதந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உடைந்த பாகங்கள் கிடைக்காத நிலையில் 2–வது உலக போரின் போது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் உருவாக்கப்பட்ட ரகசிய ஓடு தளத்தில் அது தரை இறக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் ஓரின சேர்க்கை புகார் காரணமாக ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அந்த விமானத்தின் கேப்டன் ஷகாரி அகமது ஷா (53) விமானத்துடன் தற்கொலை செய்து இருக்கலாம். ஏனெனில் அவர் அன்வர் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

சீனாவைச் சேர்ந்த விமான என்ஜினீயர் மொகுத் கைருல் அமிர் செலாமத் (29) என்பவர் பயணம் செய்துள்ளார். அவர் தொழில்நுட்பம் தெரிந்தவர். அவர் ஏதாவது தில்லு முல்லு செய்து விமானத்தில் நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவின் ரகசிய கடற்படை தளம் இந்திய பெருங்கடலின் டிகோ கார்சியா தீவில் உள்ளது. அமெரிக்கா அந்த விமானத்தை திசை திருப்பி அங்கு மறைத்து வைத்திருக்கலாம் என ரஷியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதை அமெரிக்கா திட்ட வட்டமாக மறுத்துள்ளது.

‘ரேடார்’ கருவியில் தெரியாமல் இருக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக பறக்க வைத்து ஆப் கானிஸ்தானுக்கு தலிபான் தீவிரவாதிகள் கடத்தி யிருக்கலாம். அமெரிக்காவில் நடந்த தாக்குதல் போன்று இந்தியாவில் அரங்கேற்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு முன்னாள் மந்திரி ஸ்ட்ரோப் தல்போத் தெரிவித்து இருந்தார். அதை இந்திய உளவுத்துறை மறுத்துள்ளது.

ஒரு வேளை மனிதர்கள் பற்றி அறிய விண்கலன் மூலம் இந்த விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தி சென்றிருக்கலாம்.

மலேசிய விமானம் பறந்த அதே வேளையில் இந்தியா, பாகிஸ்தான் வான்வெளி எல்லையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் பறந்துள்ளது. அது மட்டும் அந்நாடுகளின் ரோடார் திரைகளில் தெரிந்துள்ளது. ஆனால் மலேசிய விமானம் தெரியவில்லை.

அது தெரியாமல் இருக்க சிங்கப்பூர் விமானத்தில் பின்னாலேயே மலேசிய விமானமும் இயக்கப்பட்டிருக்கலாம் என்பன போன்ற 13 கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் மாயமான விமானம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

மலேசிய விமானம் வெடித்து சிதறவில்லை: ஐ.நா. அறிவிப்பு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 19th, 2014, 4:54 pm

சென்னை பெண் உள்ளிட்ட 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் உள்ளன. கடைசியாக வெளியான தகவல், கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் பாதையில் இருந்து அந்த விமானம் திரும்பி, ரேடார் திரையில் இருந்து மறையும் விதத்தில், ‘டெர்ரெயின் மாஸ்கிங்’ என்னும் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 5 ஆயிரம் அடிக்கும் தாழ்வாக செலுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.

விமானப்போக்குவரத்தில் நிபுணத்துவம் படைத்த ஒரு நபரே இதை செய்திருக்க முடியும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மலேசிய விமானம் வெடித்துச் சிதறியதாகவோ, மோதியதாகவோ தகவல் இல்லை என்று வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு, ஐ.நா.வின் ஆதரவுடன் செயல்படுகிற ‘சி.டி.பி.டி.ஓ.’ என்னும் முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு அமைப்பு கூறி உள்ளது.

இதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “காணாமல் போன மலேசிய விமானம் வெடித்து சிதறியதாகவோ, தரையிலோ தண்ணீரிலோ மோதியதாகவோ கண்டறியப்படவில்லை என வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது” என்றார்.

மேலும், “தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில், சி.டி.பி.டி.ஓ.வின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் மூலமாக விமான விபத்துக்கள் 3 அல்லது 4 தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படலாம். அணு குண்டு சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக, ‘சி.டி.பி. டி.ஓ. நெட்வொர்க்’கில் அணு குண்டு வெடிப்புகளையும், பூகம்பங்களையும் கண்டறிவதற்கு உலகமெங்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

அணு குண்டு வெடிப்புகளை கண்டுபிடிக்க இந்த அமைப்பை நிறுவி இருந்தாலும், பெரிய விமானங்கள் வெடித்துச் சிதறுவதையும், தண்ணீரிலோ தரையிலோ மோதுவதையும் கூட இது கண்டுபிடிக்கும்” எனவும் ஸ்டீபன் துஜாரீக் தெரிவித்தார்.

இதற்கிடையே விமானம் மாயமானது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக மலேசியா தங்களை அழைக்கவில்லை என்று அமெரிக்காவின் உளவுப்படை ‘எப்.பி.ஐ.’ அறிவித்துள்ளது. இதை மலேசியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக கோலாலம்பூரில் மலேசிய போக்குவரத்து மந்திரி ஷாமுதீன் உசேன் நேற்று கூறுகையில், “நான் எப்.பி.ஐ.யுடன் தொடர்பில் இருக்கிறேன். எப்.பி.ஐ. ஆட்கள் நிலவரம் பற்றி எங்களுக்கு தெரியாது. இதில் உதவுவதற்கு கூடுதல் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்களா என்பது பற்றி அவர்கள் தான் எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 20th, 2014, 9:32 am

மார்ச் 23-ல் தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு

பெங்களூரு, மார்ச் 19: பெங்களூருவில் மார்ச் 23-ஆம் தேதி தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு நடைபெறுகிறது.

இது குறித்து கர்நாடகத் தமிழ்க் குடும்பங்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் பி.வி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டு ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசியலிலும், அரசுப் பணிகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பல்வேறு ஒடுக்குமுறைகளால் தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர். எனவே இழந்துப்போன உரிமைகளை மீட்கவும், தமிழர்-கன்னடர் ஒற்றுமையை வலுபடுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மார்ச் 23-ஆம் தேதி பெங்களூரு ஆர்.பி.எ.என்.எம்.எஸ்.விளையாட்டு திடத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: நொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 26th, 2014, 7:15 pm

தற்போது திரு. மோடி அவர்கள் இந்தியப் பிரதமராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளார்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Previous

Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 65 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron