[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இன்றைய நாள் ஜனவரி 23.... - Page 4 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

Re: இன்றைய நாள் டிசம்பர் ஜனவரி 1....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 31st, 2013, 1:22 pm

டிசம்பர் 31 (December 31) கிரிகோரியன் ஆண்டின் 365ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.


நிகழ்வுகள்

1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
1881 - இலங்கை முழுவதும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1946 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1847 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
1986 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் உணவுசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தினால் 97 பேர் கொல்லப்பட்டு 140 பேர் காயமடைந்தனர்.
1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.
1994 - பீனிக்ஸ் தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
1999 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.
பிறப்புகள்

1491 - ஜாக் கார்ட்டியே, பிரெஞ்சு நாடுகாண் பயணி (இ. 1557)
1880 - ஜோர்ஜ் மார்ஷல், நோபல் விருது பெற்ற அமெரிக்கர் (இ. 1959)
1937 - அவ்ராம் ஹேர்ஷ்கோ, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
1955 - தாவூத் இப்ராகிம், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி
இறப்புகள்

1905 – அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)
2001 - தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 1....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 2nd, 2014, 10:20 am

ஜனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

கிமு 45 - யூலியன் நாட்காட்டி முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
630 - முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார்.
1502 - போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தான்.
1600 - ஸ்கொட்லாந்து ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
1700 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
1772 - 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.
1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
1801 - பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
1804 - எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
1806 - பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது.
1808 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
1833 - ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
1858 - இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
1861 - போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான்.
1866 - யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.
1867 - ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் "சின்சினாட்டி" நகருக்கும் கென்டக்கியின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
1872 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1872 - முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது.
1877 - இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார்.
1883 - இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
1886 - பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
1890 - எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
1893 - ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
1896 - இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
1899 - கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது.
1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
1905 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1906 - பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1911 - வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
1912 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
1919 - ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.
1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1927 - மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
1927 - துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927ஆக மாற்றப்பட்டது.
1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.
1935 - இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.
1945 - பெல்ஜியத்தின் செனோன் நகரில் 30 ஜேர்மனிய போர்க்கைதிகள் ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1947 - இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஜேர்மனியின் பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.
1948 - பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
1948 - பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா வழங்க முடியாதென அறிவித்தது.
1949 - ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
1956 - சூடான் நாடு எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.
1958 - இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
1958 - ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
1959 - கியூபாவின் அதிபர் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா ஃபிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1960 - கமரூன் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1962 - மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1971 - ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
1978 - ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
1983 - அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக (TCP/IP) மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.
1984 - புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1993 - செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
1995 - உலக வணிக அமைப்பு உருவாக்கம்.
1999 - யூரோ நாணயம் அறிமுகம்.
2008 - கொழும்பில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் [[இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புகள்

1894 - சத்தியேந்திர நாத் போசு, இந்தியக் கணிதவியலர் (இ. 1974)
1902 - பஸ்டர் நூபன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1977)
1914 - நூர் இனாயத் கான், பிரித்தானிய உளவாளி (இ. 1944)
1919 - ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)
1942 - அலசான் வட்டாரா, ஐவோரிய அரசியல்வாதி
1943 - செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்
1944 - உமர் அல்-பஷீர், சூடானிய அரசுத்தலைவர்
1951 - நானா படேகர், இந்திய நடிகர்
1952 - சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் மன்னர்
1952 - ஷாஜி என். கருண், இந்தியத் திரைப்பட இயக்குநர்
1966 - மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)
1975 - சோனாலி பண்டர், இந்திய நடிகை
1978 - பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி
1978 - வித்யா பாலன், இந்திய நடிகை
1984 - அலோக் கபாலி, வங்காளதேச துடுப்பாளர்
1986 - சுங்மின், தென்கொரிய நடிகர்
இறப்புகள்

1894 - ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர் (பி. 1857)
1901 - சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832)
1955 - சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய அறிவியலாளர் (பி. 1894)
1992 - கிரேசு ஹாப்பர், அமெரிக்க நிரலாளர் (பி. 1906)
2008 - தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1960)
சிறப்பு நாள்

புத்தாண்டு நாள் (கிரெகொரியின் நாட்காட்டி)
விடுதலை நாள்:
கியூபா (1899)
எயிட்டி (1804)
சூடான் (1956)
கமரூன் (1960)
புரூணை (1984)
செக் குடியரசு (1993)
சிலோவாக்கியா (1993)
தாய்வான் (1912)
உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)
உலகக் குடும்ப நாள் (பன்னாட்டு)
குவான்சா கடைசி நாள் (அமெரிக்க ஐக்கிய நாடு)

நன்றி விக்கி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 2....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 2nd, 2014, 10:27 am

ஜனவரி 2 (January 2) கிரிகோரியன் ஆண்டின் இரண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 (நெட்டாண்டுகளில் 364) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

366 - அலமானி எனப்படும் ஜேர்மனிய ஆதிகுடிகள் ரைன் ஆற்றைக் கடந்து ரோமை முற்றுகையிட்டனர்.
1492 - ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாடா சரணடைந்தது.
1757 - கல்கத்தாவை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
1782 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
1791 - ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை இந்திய ஆதிகுடிகள் படுகொலை செய்தனர்.
1793 - ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.
1893 - வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1905 - ரஷ்யக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.
1921 - ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
1942 - இரண்டாம் உலகப் போர்: மணிலா ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
1954 - பத்மசிறீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது.
1955 - பனாமாவின் அதிபர் ஜோசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
1959 - முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1971 - கிளாஸ்கோவில் உதைபந்தாட்ட மைதானம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.
1982 - சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
1993 - யாழ்ப்பாணம், கிளாலி நீரேரியில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1999 - விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
2008 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
பிறப்புகள்

1940 - எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், ஏபெல் பரிசு பெற்ற கணித இயலர்.
1961 - கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர், தளபாதி (இ. 1993)
இறப்புகள்

1782 - கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - இலங்கையின் கண்டியை ஆண்ட கடைசி அரசன்.
1876 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
1960 - தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 3....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 3rd, 2014, 10:50 am

ஜனவரி 3 (January 3) கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
1496 - லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.
1653 - இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.
1754 - அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.
1815 - ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.
1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.
1859 - தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.
1870 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
1888 - 91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.
1921 - துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.
1924 - பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.
1925 - இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக பெனிட்டோ முசோலினி அறிவித்தார்.
1932 - பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.
1947 - அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
1956 - ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
1957 - முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
1958 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
1959 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.
1961 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.
1961 - இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1962 - இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) பிடல் காஸ்ட்ரோவை மதவிலக்கு செய்து அறிவித்தார்.
1966 - இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின.
1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
1976 - அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
1977 - ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1990 - பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
1994 - ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1995 - விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
2004 - எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்

1740 - கட்டபொம்மன், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)
1840 - தந்தை தமியான், கத்தோலிக்கத் துறவி (இ. 1889)
1892 - ஜே. ஆர். ஆர். டோல்கீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1973)
1925 - டி. கே. புஷ்பவல்லி, திரைப்பட நடிகை
1953 - முகமது வாகித் அசன், மாலைதீவு அரசுத்தலைவர்
1956 - மெல் கிப்சன், அவுஸ்ரேலிய நடிகர்
1969 - மைக்கேல் சூமாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த பார்முலா 1 ஓட்டுனர்
1978 - லியா கெபிடே, எத்தியோப்பிய-அமெரிக்க நடிகை
இறப்புகள்

235 - அந்தேருஸ் (திருத்தந்தை)
1795 - சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (பி. 1730)
2013 - எம். எஸ். கோபாலகிருஷ்ணன், இந்திய வயலின் கலைஞர் (பி. 1931)
2005 - ஜே. என். டிக்சித், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1936)
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 3....

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 10:38 pm

கட்ட பொம்மன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 4....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 4th, 2014, 12:20 pm

ஜனவரி 4 (January 4) கிரிகோரியன் ஆண்டின் நான்காம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361 (நெட்டாண்டுகளில் 362) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 46 - டைட்டஸ் லபீனஸ் ருஸ்பீனா என்ற நகரில் இடம்பெற்ற சமரில் ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்தான்.
1493 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
1642 - இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினான்.
1698 - லண்டனில் அரச மாளிகையான வைட்ஹோல் தீயினால் சேதமுற்றது.
1717 - நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தின.
1762 - ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.
1847 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார்.
1854 - கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1878 - சோஃபியா நகரம் ஒட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.
1884 - ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
1889 - இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
1896 - யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1912 - பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
1951 - சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.
1958 - 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார்.
1958 - முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
1959 - லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
1990 - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - அல்ஜீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 - ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
பிறப்புகள்[தொகு]

1809 - லூயி பிறெயில், புடையெழுத்து கண்டுபிடித்தவர் (இ. 1852)
1813 - ஐசக் பிட்மன், ஆங்கிலேய மொழியியலாலர் (இ. 1897)
1889 - பதஞ்சலி சாஸ்திரி, 2வது இந்தியத் தலைமை நீதிபதி
1941 - க. துரைரத்தினசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1984 - ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்
1985 - ஏல் ஜெஃபர்சன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்
இறப்புகள்

1941 - என்றி பெர்குசன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1859)
1960 - அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1913)
1961 - எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் (பி. 1887)
1994 - ராகுல் தேவ் பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1939)
2003 - கான்ராடு ஹால், அமெரிக்க ஒளிப்பதிவாளர் (பி. 1927)
சிறப்பு நாட்கள்

பர்மா - விடுதலை நாள் (1948)
காங்கோ மக்களாட்சிக் குடியரசு - மாவீரர் நாள்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 5....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 5th, 2014, 11:16 am

ஜனவரி 5 (January 5) கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1477 - பேர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டான். பேர்கண்டி பிரான்சின் பகுதியானது.
1554 - நெதர்லாந்தில் ஐன்ட்ஹோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் சேதமாயின.
1655 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
1757 - பிரான்சின் பதினைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1781 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வேர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
1854 - சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
1900 - ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
1905 - யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
1918 - ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) அமைக்கப்பட்டது.
1933 - கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
1940 - பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
1945 - போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
1967 - இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1971 - உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
1972 - விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்கஅதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
1974 - பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.
1975 - தாஸ்மானியாவில் டாஸ்மான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
1976 - கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
1984 - ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
1997 - ரஷ்யப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 - ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
2007 - கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
பிறப்புகள்

1592 - ஷாஜகான், மொகாலயப் பேரரசர் (இ. 1666)
1876 - கொன்ராடு அடேனார், செருமனியத் அரசியல் தலைவர் (இ. 1967)
1902 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)
1917 - சி. டி. ராஜகாந்தம், நகைச்சுவை நடிகை
1926 - ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)
1927 - சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (இ. 2001)
1928 - சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தான் அரசுத்தலைவர் (இ. 1979)
1932 - லலிதா, நாட்டிய நடிகை
1932 - உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர்
1937 - சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)
1938 - நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்
1941 - மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)
1969 - மர்லின் மேன்சன், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1986 - தீபிகா படுகோண், இந்திய திரைப்பட ந‌டிகை
இறப்புகள்

1762 - எலிசவேத்தா பெட்ரோவ்னா (பி. 1709)
1933 - கால்வின் கூலிஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் ( பி. 1872)
1943 - கார்வர், அமெரிக்க தாவரவியலாளர் (பி. 1864)
1952 - விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, ஸ்கொட்லாந்து அரசியல்வாதி (பி. 1887)
1970 - மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
1981 - அரால்டு இயூரீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாலளர் (பி. 1893)
2000 - குமார் பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர், (பி. 1938)
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 5....

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 5th, 2014, 3:14 pm

இன்று மேலும் பல தகவல்கள் தெரிந்துக்கொனண்டத்தில் மகிழ்ச்சி.

நன்றி :-gr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 5....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 5th, 2014, 3:43 pm

கரூர் கவியன்பன் wrote:இன்று மேலும் பல தகவல்கள் தெரிந்துக்கொனண்டத்தில் மகிழ்ச்சி.

நன்றி :-grபுதிய தகவல்கள் இருந்தாலும் அறிய தரவும் கவி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இன்றைய நாள் ஜனவரி 5....

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 5th, 2014, 3:51 pm

எனக்கு தெரிந்திருந்தால் தானே.... :-vilu
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

PreviousNext

Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 91 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]