[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ரௌத்திரம் பழகு...! - கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

ரௌத்திரம் பழகு...! - கரூர் கவியன்பன்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm

இந்தக் கட்டுரையில் நான் புதிதாக எதுவும் சொல்லிவிடப்போவதில்லை. உங்களில் மறைத்தும், மறைந்தும் கிடக்கும் புத்ழுதிகளை என் எழுதுகோல் முனைகொண்டு கிளறிவிடவே வந்திருக்கிறேன்.

இந்தக் கட்டுரையை தொடங்குவது எப்படி என்று நினைத்துக்கொண்டிருக்கையில் சிந்தனை முழுவதும் அரிவாள் வீசும் காட்சியும், உடலிலே உயிர் தங்கி வாழ விரும்பும் அழுகுரலும் ஒருங்கே அதிர்கிறது செவிப்பறையில்.

சா...தி...ய...ம்... எவனோ, எப்பவோ,எங்கோ கிழிக்கத்தொடங்கிய கோ(கே)டு அது. என்ன அந்தக் கோடு பலரின் இரத்தத்தாலும் சதைப்பிண்டத்தாலும் வரையப்பட்டிருக்கும் வன்முறையின் உச்சக்கட்டம். அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களின் அழுகுரல்தான் இந்தக் கோட்டினை திறந்து வைக்க கைத்தட்டல்களாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வாய்த்தட்டல்கள்.

இளவரசன்...
முன்பு இந்தப் பெயர் ஒலிக்காத இடமே இல்லை என்றபோதிலும் இப்பொழுது இது யாரோ ஒருவனுடைய பெயர்.

கோகுல்ராஜ்...
செய்தி கேட்டபொழுது உணர்சிவசப்படத் தொடங்கிய இரகுத்டம் இன்று அன்றாட வேலைகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று சங்கர்...
துடிதுடிக்கும் காட்சிகளைப் பார்த்து அகல விரிந்த விழிகள் இரவு படுக்கையில் நாளை செய்யவேண்டிய வேலைகளுக்குள் மூழ்கத்தொடங்கிவிட்டன.

இனியும் எத்தனையோ...!

நிகழ்வு நடக்கும் பொது “எனக்குள் சாதி கிடையாதுப்பா.. அதனை ஆதரிக்கவும்போவதில்லை“ என சூளுரைக்கும் மனதுகள், சாதியக் கோட்பாடுகளை எதிர்க்கப்போவதும் இல்லை என்பது நிதர்சனமான உண்மையும் கூட. வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் நடந்தேறுகையில் சாதி நினைத்து வெட்கும் தலைகள், ஏதோ ஒரு தருணத்தில் சாதியம் நினைத்தும் சொல்லியும் லேசாகவாவது தலைநிமிர்ந்து பார்க்காமல் இருந்திருக்க வாயிப்பில்லை. இருக்காது எனவும் உறுதித் தர உறுதியான நெஞ்சம் இல்லை. காரணம் கேட்டால், சூழல்கள் என பல முனைகளிலிருந்து பலத்தமாக வருகிறது பதில்கள் மட்டும். எப்படியேனும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ அல்லது செயலுக்காகவோ மதம், இனம், சாதி எனும் சொல்லாடல்கள் பயன்படுத்தப்படாமல் இல்லை. ஆனால் அவைகள் வெறும் சொல்லாக மட்டும் இருந்தபாடில்லை என்பது கொடூரமான உண்மை.

தொழில்துறையில் முன்னேறும் மாநிலம், உள்கட்டமைப்பில் உயர்ந்து கொண்டே வரும் மாநிலம், சுகாதாரம், கல்வி என சமீபகாலமாக வளர்ந்து வரும் மாநிலம் தான், தமிழகம். அதனிகராக சாதி சார்ந்த வன்முறைகளும் மோதல்களும் ஆணவக் கொலைகளும் பல உடல்களைத் தின்று தன்னை நன்கு வளர்த்துள்ள மாக்கள் நிறைந்ததும் தமிழகம் தான் என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் இக்கருத்திற்கு மேலும் சாட்சியாக அமைந்துவிடுகின்றன. இந்த நிகழ்வைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகள் பற்றி எரிகின்றன. அதிலும் படித்தவர்கள் தான் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது வெட்க்கக் கேடானது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுவது நியாயம் தான்.

கல்வி என்பது எதனை கற்றுணர்வது...?

இதுவரை சொன்னது எதுவும் புதிதல்ல. இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் வேடிக்கை பார்ப்பதும் புதிதல்ல. பயம் நிறைந்த மனித பிண்டங்களின் நடுவில் தான் தினந்தோறும் இன்னொரு பிண்டத்தின் வாழ்க்கைப் பயணம். மரத்தமிழனின் மனம் மட்டுமல்ல வீரமும் செத்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது.

எது வீரம் என்பதை முதலில் உணர்க...!

ஊடகங்களின் உளவு ஒரு பக்கம், அரசியல்வாதிகளின் அறைகூவல் மறுபக்கம், மௌனிகள் நடுப்பக்கம். யார் யாருக்கு எதெது தேவையோ அவையவை பத்திரமாக பெயர்த்தெடுத்துக்கொள்ளப்படுகிறது அவரவர் தேவைக்கேற்ப...
ஆண் பெண்ணோடு தானே சேர வேண்டும். அதுவேதானே இயற்கையின் நியதியும் கூட. அதுதானே நடந்ததும்.

வேற்று சாதி ஆண் கைப்பட்டால் பெண்மை மணக்காதா என்ன...?

மாற்று இனத்தவள் என்றபோதும் தாயின் கருவறை கண் திறக்காதா என்ன...?

வக்கிரம் நிறைந்த உள்ளங்களில் வக்கிரமான எண்ணங்களே உக்கிரம் பெற்றுஇருக்கும்.

கேள்விகளை மட்டுமே விட்டுச் செல்கிறேன்.நிச்சயம் பதில்கள் உங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில்.

மெய் உணர்க...! ரௌத்திரம் பழகு...!
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 95 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron