[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

பிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » பிப்ரவரி 19th, 2016, 9:05 pm

Image

தற்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தி பிரீடம் - 251 என்ற செல்பேசியும் அதன் விலையும் தான். இந்திய ரூபாயில் 251 அதாவது அமெரிக்க மதிப்பில் சுமார் 3.675 டாலருக்கும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் சாதாரண பர்கர் ஒன்றின் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று அலசும்போது இந்த செல்பேசியை தயாரித்து விற்பதாகச் சொல்லிக்கொள்ளும் ரிங்க்பெல்(RingBell) நிறுவனத்தின் விளம்பர உத்தியை உணரமுடிகிறது.

சீனா நிறுவனமான Adcom-காமிடமிருந்து இந்த செல்பேசியை ரிங்க்பெல் தருவித்து Make In India என்ற திட்டத்தின் மூலமாகத் தாங்கள் தயாரித்து விற்பதாக இந்நிறுவனம் சொல்லிக்கொள்கிறது. அதாவது 2500 ரூபாய் மதிப்புள்ள Adcom நிறுவன செல்பேசியை வெறும் 251 ரூபாய்க்கு ரிங்க்பெல் விற்கிறது. இவ்வாறு விற்கவேண்டிய காரணம் என்ன?

இங்கு தான் தங்கள் நிறுவன பெயரைச் சந்தைபடுத்தும் உத்தியை இந்நிறுவனம் மேற்க்கொண்டுள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல இந்திய செல்பேசி நிறுவனங்களான மைக்ரோமாக்சு(MicroMax), லெமன்(Lemon), ஏர்போன்(AirPhone), ஒனிட(Onida), லாவ(Lava), கார்பன்(Karbonn) போன்றவை தங்களை பற்றியும் தங்களது தயாரிப்புகள் பற்றியும் இந்திய நுகர்வோர்களிடம் சந்தைபடுத்தும் பொருட்டு சுமார் 50 - 100 கோடி ரூபாய்களை தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் விளையாட்டு பேட்டிகளில் செலவிட்டுள்ளன. சுமார் 2500 விலை மதிப்புடைய செல்பேசியை ரூபாய் 251 விற்கும்போது ரிங்க்பெல் நிறுவனத்திற்கு சுமார் 2249 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த நட்டம் மற்ற நிறுவனங்களைப் போல விளம்பரதிற்க்காகச் செலவிடும் தொகையைவிட மிகக் குறைவானதாகும்.


எப்படி?

அதாவது 22 கோடி ரூபாயை இந்நிறுவனம் தங்களை இந்தியாவில் சந்தைபடுத்த விளம்பர தொகையாகச் செலவு செய்கிறது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது இந்தத் தொகை 50-60% குறைவு. எந்த ஒரு நிறுவனங்களும் விளம்பரத்திற்கு செலவிடும் தொகையை நட்ட கணக்கில் சேர்ப்பதில்லை, இவற்றைத் தொழிலை மேம்படுத்தும் ஒரு முதலீடாகவே எடுத்துக்கொள்கிறது. ரிங்க்பெல் நிறுவனமும் அப்படியே தான். இப்போதைக்கு அவர்களுக்கு இலாபம் முக்கியமல்ல, தங்கள் நிறுவனத்தின் பெயரும், அவர்கள் தாரிப்புகள் பற்றிய பேச்சு நாட்டின் மூலைமுடுக்கு வரை ஒலிக்க வேண்டும் என்பதே. இவர்கள் திட்டமிட்டபடியே இன்று இந்தியாவில் அவர்களை பற்றிப் பேசாதவர்கள் எவருமில்லை எனலாம். இவர்களின் தயாரிப்புபற்றி நல்ல ஒரு விளம்பரம் வெறும் 22 கோடிகளில் கிடைத்துள்ளது என நினைக்கும்போது, உண்மையில் இது சரியான ஒரு வியாபார உத்தி எனலாம். இந்த 22 கோடி முதலீடு இனிவரும் காலங்களில் இவர்கள் தயாரித்து விற்பதாகச் சொல்லிகொள்ளும் செல்பேசிகளை நல்ல விலையில் விற்க ஒரு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது.
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: பிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி

படிக்காத இடுகை [Unread post]by vaishalini » பிப்ரவரி 25th, 2016, 9:32 pm

இதுல இவ்ளோ செய்தி இருக்கா...!

தெரியாம போச்சே...


நாமதான் கவனமா இருக்கணும் போல
பயனர் அவதாரம் [User avatar]
vaishalini
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 21
இணைந்தது: ஜனவரி 16th, 2016, 4:58 pm
மதிப்பீடுகள்: 25
இருப்பிடம்: tanjore
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: பிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2016, 4:09 pm

நல்ல யுக்தி.....

மூளைக்காரனுங்கப்பா...

நன் தான் இன்னும் பதிவு பண்ணலையே...?
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 92 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]