[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்ப்பச்சைக்கொடி காட்டிவிட்டார்! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.

அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்ப்பச்சைக்கொடி காட்டிவிட்டார்!

படிக்காத இடுகை [Unread post]by Raja » ஆகஸ்ட் 28th, 2014, 2:56 pm

பொதுவாக ரெயில் நிலையங்களில், ரெயில்கள் பிளாட்பாரத்தில் தயாராக நிற்கும். ஆனால், ரெயில்வே கார்டு விசில் அடித்து பச்சைக்கொடி காட்டியவுடன்தான் ரெயில் புறப்படும். அதுபோல, பிரதமர் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய நேரத்தில், ஏழை மக்கள் அனைவரும் வங்கிக்கணக்கை பெறும் வகையில், அறிவித்த ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’ திட்டத்துக்கு இன்று பச்சைக்கொடி காட்டி தொடங்கிவைக்கிறார்.
ஆகஸ்டு 15–ந் தேதி வெளியிட்ட அறிவிப்பை இருவாரங்களுக்குள் நிறைவேற்றத்தொடங்கும் இந்த முயற்சியை நிச்சயமாக பாராட்டியே தீரவேண்டும்.
ஒருசில வரிகளில் பிரதமர் வெளியிட்ட இந்த அறிவிப்பில் ஏராளமான பயன்கள் ஏழை–எளிய மக்களுக்கு இருக்கிறது. நாட்டில் எண்ணற்ற மக்களிடம் மொபைல் போன் இருக்கிறது. ஆனால், வங்கிக்கணக்கு இல்லை. இந்த நிலையை மாற்ற உள்ளோம். ஏழை–எளிய மக்களும் வங்கிக்கணக்குடன் இணைக்கும் வகையிலான திட்டம்தான் இந்த திட்டம் என்று அறிவித்தார்.

சொன்னதோடு இல்லாமல் இந்த திட்டத்தின் சிறப்புகள் பற்றியும், அதை வழிகாட்டும் முறைகள் பற்றியும் நாடு முழுவதும் உள்ள 7 லட்சத்து 25 ஆயிரம் வங்கி அதிகாரிகளுக்கு இ–மெயிலும் அனுப்பியுள்ளார். இந்த திட்டத்தின்கீழ் வங்கிக்கணக்கை தொடங்குவதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் ‘ருபே’ என்ற பெயரிலான ‘டெபிட்’ கார்டும் வழங்கப்படும். கணக்கு தொடங்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்சும் வழங்கப்படும். இந்த வங்கிக்கணக்குகள் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து தொடங்கப்படுவதால், அனைத்து நேரடி மானியங்களும் இந்த கணக்கில் வரவு வைக்கமுடியும். ஆரம்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் வரை ‘ஓவர் டிராப்டு’ பெறமுடியும். வாங்கிய கடனான இந்த ஓவர் டிராப்டை திருப்பிக்கட்டுபவர்களுக்கு, 6 மாதங்களுக்குப்பிறகு 5 ஆயிரம் ரூபாய் ஓவர் டிராப்டு வழங்கப்படும். நாடு முழுவதிலும் 7 கோடியே 50 லட்சம் பேர்களுக்கு இந்த வங்கிக்கணக்கைத் தொடங்குவதற்காக 60 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன. இன்று பிரதமர் தொடங்கிவைக்கும் இந்த திட்டம், நாடு முழுவதும் 76 நகரங்களில் தொடங்கப்படுகிறது.

பிரதமர், அனைத்து மக்களும் வங்கிக்கணக்கு தொடங்கவேண்டும் என்று உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு உறுதுணையாக ஊக்குவிக்கும் பல சலுகைகளை அளிக்கவேண்டிய ரிசர்வ் வங்கி, இருக்கும் சலுகைகளையும் பறிக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. வங்கி சேவையிலேயே மக்களுக்கு பெரிதும் பலன் அளிக்கும் சேவை ஏ.டி.எம் சேவை. அதிலேயே ரிசர்வ் வங்கி கை வைக்கப்போகிறது.

முதற்கட்டமாக, சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய 6 இடங்களிலும், கணக்கு இல்லாத வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக உச்சவரம்பு 5–ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அனைத்து வங்கிகளும் தங்கள் ஏ.டி.எம்களில் தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களே மாதம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாமாம். ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மக்களுக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். அரசிலும் சரி, தனியார் நிறுவனங்களிலும் சரி, மாத சம்பளத்தைக் கூடகையில் ரொக்கமாக கொடுக்கும் நிலை மாறி, நாங்கள் வங்கிகளில் உங்கள் சம்பளத்தை போட்டுவிடுகிறோம். நீங்கள் வங்கிகளில் எடுத்து கொள்ளுங்கள் என்ற நிலைமை வந்துவிட்டது
.
இப்போதெல்லாம் வீடுகளில் பணம் வைப்பதோ, வெளியூர்களுக்கு செல்லும்போது கையில் எடுத்துச்செல்வதோ பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையில், எல்லோரும் தேவைப்படும் பணத்தை எடுக்க மட்டும் ஏ.டி.எம். பயன்படுத்துகிறார்கள். மேலும், பல கிராமப்புறங்களில் எங்காவது ஒரே ஒரு ஏ.டி.எம்.தான் இருக்கும். அதைத்தான் எல்லா வங்கிகளிலும் கணக்கு வைத்திருக்கும் மக்கள் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கும். எல்லோருக்கும் வங்கிக்கணக்கு என்ற இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, ஏ.டி.எம். பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமே தவிர, இதுபோல ஏ.டி.எம்.–ல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் விதிப்பது சரியாக இருக்காது. ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு கட்டணமே வசூலிக்கக்கூடாது.

நன்றி:தினந்தந்தி
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment

Return to பொது (General)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 81 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]