[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • நக்கீரனின் தவறான செய்தி வெளியீடு : ஆப்பிள் - சாம்சங்
Page 1 of 1

நக்கீரனின் தவறான செய்தி வெளியீடு : ஆப்பிள் - சாம்சங்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 31st, 2014, 6:17 pm
by கரூர் கவியன்பன்
Image

ஒரு சில வாரங்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவலாக பகிரப்பட்ட செய்தி தான் இது. ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை மீறலுக்காக சாம்சங் நிறுவனம் நூறு கோடி டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கலிஃபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அதை 30 டிப்பர் லாரிகளில் 5 செண்ட் சில்லறை காசுகளாக சாம்சங் நிறுவனம் எடுத்து வந்து ஆப்பிள் நிறுவனத்தில் கொட்டி விட்டுச் சென்று விட்டது.

- இது தான் அந்தச் செய்தி.

சமூக வலைதளங்களில் இப்படிப் பட்ட கப்ஸா செய்திகள் பரவலாக பகிரப்படுவதும், அவை உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் அப்படியே எல்லோரும் அப்படியே மீண்டும் பகிருவதும் சாதாரணம். ஆனால் 26 ஆண்டுகால பத்திரிகை ஒன்று அது உண்மை தானா என்றெல்லாம் கூட ஆராயாமல் அப்படியே எடுத்து செய்தியாக தருவதை எப்படிக் காறித்துப்புவது?

உண்மையில் நடந்தது என்னவென்றால், ‘ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் கிட்டத்தட்ட 93 கோடி டாலர்கள் நஷ்ட ஈடு தரவேண்டும்’ என்று கலிஃபோர்னியவைச் சேர்ந்த ஜூரி குறிப்பிட்டுள்ளார். இந்த ‘ஜூரி’யின் தீர்ப்பை ஜட்ஜ் பரிசீலித்து இறுதித் தீர்ப்பு வழங்க வேண்டும். அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் சாம்சங்கிற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒரு பேச்சுக்கு சாம்சங் நிறுவனம் 5 செண்ட் காசுகளாக நூறு கோடி டாலர்களை தருகிறது என்றே வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு 5 செண்ட் காசும் சுமார் 5 கிராம் எடையுள்ளது. நூறு கோடி டாலர் = 1 பில்லியன் டாலர் = 20 பில்லியன் 5 செண்ட்டுகள்.

ஆக, 5 கிராம் = 0.005 கிலோ * 20,000,000,000 = 100,000,000 கிலோ = 100,000 டன். அதாவது ஒரு லட்சம் டன் மொத்த எடை.

இந்தக் கணக்குப்படி பார்த்தால் 18-வீல் ட்ரக்குகள் குறைந்த பட்சம் 2,755 ட்ரக்குகள் தேவைப்படும்.

தவிர, 20 பில்லியன் 5 செண்ட் காசுகள் புழக்கத்தில் இல்லவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அவற்றை மொத்தமாக திரட்டுவது என்பது முடியவே முடியாத காரியம். 2006-ம் ஆண்டில் ஒட்டு மொத்த அமெரிக்காவிலும் 20 பில்லியன் 5 செண்ட் காசுகள் இருந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதன் பிறகு அவற்றிலுள்ள காப்பர் / ஸிங்க் ஆகிய தாதுப் பொருட்களுக்காக மக்கள் பெருமளவில் உருக்கிவிட்டார்கள்.

எல்லாவற்றையும் விட, தப்பித்தவறி சாம்சங் நிறுவனம் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான காரியத்தைச் செய்தாலும், “ஒழுங்கு மரியாதையா எடுத்திட்டு போயிட்டு செக்கா கொடு, இல்லைன்னா அக்கவுண்ட்டிலே மாத்தி விடு” என்று கேட்க முழு உரிமையும் இருக்கிறது.

உண்மை என்னவென்றால் இந்தச் செய்தி ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஸ்பானிய மொழி இணைய தளம் ஒன்றில் ‘நகைச்சுவை’ பகுதியில் கிண்டலுக்காக வெளியானது. அதை உண்மை என்று நம்பி பலரும் பகிர ஆரம்பித்ததை தான் நம்மூர் ‘புலனாய்வு புலி’யும் செய்தியாக்கியிருக்கிறது.

நன்றி கட்டுரை

Re: நக்கீரனின் தவறான செய்தி வெளியீடு : ஆப்பிள் - சாம்சங்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: அக்டோபர் 7th, 2014, 11:42 am
by கரூர் கவியன்பன்
:o :o :o :o