[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:

படிக்காத இடுகை [Unread post]by அ.இராமநாதன் » ஏப்ரல் 1st, 2017, 9:58 pm


திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

அவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்
நிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.

1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

எம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்
அவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே
வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா
ஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா
வளைவு அமைக்கப் பட்டதுடன்,

கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
-
தி இந்து
அ.இராமநாதன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 46
இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
மதிப்பீடுகள்: 38
இருப்பிடம்: chidambaram
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm

இந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..?
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 26 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]