[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
Abulance சேவையில் ஊழல் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

Abulance சேவையில் ஊழல் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 12th, 2014, 10:08 am

Image

108 Ambulance சேவையில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது ராஜஸ்தான் மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2010-2011ஆம் ஆண்டு காலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பணிகளுக்காக ஜிகித்ஜா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்துடன் அசோக் கெலாட் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் அந்த நிறுவனத்துக்கு தேவைக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஜெய்ப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயர் பங்கஜ் ஜோஷி என்பவர், அங்குள்ள அசோக்நகர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி சாவந்த் சிங் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், "முதல்கட்ட விசாரணையில், ஜிகித்ஜா ஹெல்த்கேர் நிறுவனம் போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களை தயாரித்து, அதன்மூலம் ரூ.2.56 கோடி வரை ஊழல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, ஜிகித்ஜா ஹெல்த்கேர் நிறுவன இணை நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகனுமான ரவி கிருஷ்ணா, இயக்குநர்கள் அசோக் கெலாட், சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம், ராஜஸ்தான் மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.ஏ. கான், ஜிகித்ஜா ஹெல்த்கேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்வேதா மங்கள், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சபி மதேர், தேசிய ஊரக சுகாதார மேலாண்மை இயக்குநரக இயக்குநர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கெலாட் (தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்) உள்பட பலர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக உள்ளனர். ஆதலால் இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது." என்று சாவந்த் சிங் தெரிவித்தார்.


நன்றி-சென்னை ஆன்லைன்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: Abulance சேவையில் ஊழல் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 12th, 2014, 9:06 pm

பிணத்தின் நெற்றியில் இருக்கும் ஒத்தை ரூபாய் பணத்தை எடுக்கும் கும்பல் இவர்கள் தான்.

எது எதில் கொள்ளையடிப்பது என்று ஒரு அறிவு இல்லையா ?

மனிதனின் உயிருடன் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறையிலா ஊழல் பண்ணுவது.

நல்லாவே உங்கப்பா பயிற்சி கொடுத்துள்ளார் :oops: :oops:
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 63 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron