[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் ! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் !

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 9th, 2014, 10:09 am

Image
பெரம்பலூர் தொகுதியில் வாக் காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதால் அதன் அடிப் படையில் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

சிவகாசியிலுள்ள ’கேலக்ஸி டிரஸ்ட்’டின் தலைவர் தமிழ்ச் செல்வன். கடந்த 6-ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தை சந்தித்த இவர், ’தமிழகத்தில் அனைத் துத் தொகுதிகளிலும் வாக்காளர் களுக்கு தாராளமாக பணம் கொடுக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையமோ பிற அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் ஜனநாயகம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தலை ரத்துசெய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பிரத்தியேகமாக பேசிய தமிழ்ச்செல்வன், ’’தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஆளும் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்து தேர்தல் முடிவுகளை மாற்றிவிட்டனர். இவர்கள் பணம் கொடுக்க ஏதுவாக தேர்தல் ஆணையமும் 144 தடையுத்தரவை அமல்படுத்தியது. தமிழக தேர்தல் களத்தில் 1000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

எனவேதான், மறு தேர்தல் நடத்தக் கோரி ஒரு சாதாரண இந்தியக் குடிமகனாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தைத் சந்தித்து புகார் கொடுக்க நேரம் கேட்டிருந்தேன். இதுதொடர்பாக நான் அனுப்பிய 2 மின் அஞ்சல்களுக்கு அவர் பதில் தரவில்லை. அவரது தனிச் செயலர் மல்ஹோத்ராவை தொடர்பு கொண்டு, ‘தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் கேட்டு நான் உங்களிடம் பிச்சை கேட்பதுபோல் காத்திருக்க வேண்டுமா?’ என்று கோபப்பட்ட பிறகுதான் 6-ம் தேதி மாலை 4 மணிக்கு என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார் சம்பத்.

எனது புகாரை மேலோட்டமாக கேட்டவர், ’மேற்கொண்டு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தலைமை இயக்குநர் (செலவினங்கள்) பி.கே.தாஸை பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பி.கே.தாஸிடம் தமிழகத்தில் நடந்த தேர்தல் கூத்துகள் அனைத்தையும் எடுத்து விளக்கினேன். ’ஒரு முன்னோடி திட்டமாகத்தான் தேர்தலின்போது தமிழகத்தில் 144 தடையுத்தரவை அமல்படுத்தினோம். ஆனால், அது எதிர்பார்த்த பலனை தர வில்லை.

பெரம்பலூர் தொகுதி யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் அடிப் படையில் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இதேபோல், மற்ற தொகுதி களிலும் முறைகேடுகள் நடந் திருப்பதற்கான ஆதாரங்களை நீங்கள் கொடுத்தால் அந்தத் தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உங்க ளுக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். இதற்கு தனி மனிதனான என்னால் எப்படி ஆதாரத்தை திரட்டிக் கொடுக்கமுடியும்?

பெட்ரோலிய அமைச்சகத்தில் ஏழாயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான புகாரை பிரதமர் அலுவலகத்தில் 9-ம் தேதி கொடுக்கப்போகிறோம். அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தித்தான் ஊழலை வெளிக்கொண்டுவர வேண்டும். அதேபோல் இந்த விஷயத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த நடவடிக்கை எடுங்கள்’ என்று கேட்டேன்.

அதற்கு தாஸ், ‘சி.பி.ஐ. விசாரணை கேட்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. வேண்டுமானால், நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பொதுநல வழக்குப் போடுங்கள்’ என்று சொன்னார். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் எங்கள் புகார் மீது இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறோம்’’ என்று சொன்னார்.


நன்றி-தி இந்து
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: 144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் !

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 9th, 2014, 2:57 pm

இந்த பேதியை கிளப்பி விட்டவங்க யாருன்னு எனக்கு தெரியும். எங்க நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.

அவர் படத்தில் தான் இருக்கிறார் :)

எல்லாமே கட்டம் போட்டு, வட்டம் போட்டு, திட்டம் போட்டு, சட்டம் போட்டு முடிச்சிடீங்க அப்புறம் என்ன உங்களுக்கு தெரியும். வாய கிளறாதீங்க கெட்ட கெட்ட பேச்சா வாயில் வரும் :oops: :oops:
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 63 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron