[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே! கவர்ச்சியானவர் ? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே! கவர்ச்சியானவர் ?

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 28th, 2014, 11:58 am

Image


மத்திய கல்வித்துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்காதவர் என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் ட்விட்டரில் பதிவு போட்டு புதிய சர்ச்சையை உருவாக்கிவிட்டிருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஸ்மிரிதி இரானி. இவர் மத்திய கல்வி மற்றும் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.

இவர் குறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான், கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இரானி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

பாஜக, ஒமர் அப்துல்லா கண்டனம் இதற்கு பா.ஜ.க உடனடியாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இரானியை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது துரதிருஷ்டவசமானது என கூறியுள்ள மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவார் என்று தெரிவித்தார்.

மக்கானின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சராக உள்ளவர் கற்றிருக்கவேண்டும் என்றால், விமான போக்குவரத்து துறையை கவனிப்பவர் விமானியாக இருக்கவேண்டும் என மக்கான் கூறுவாரா என கேள்வியெழுப்பினார். இது முற்றிலும் முட்டாள்தனமான கருத்து என உமர் பதில் ட்விட் செய்துள்ளார். இரானியை பற்றி கவர்ச்சியானவர் மற்றும் மேல் தட்டு சமூகத்தை சேர்ந்தவர் என வரம்பு மீறி டுவிட் செய்துள்ள மக்கானுக்கு ட்விட்டரிலேயே மேலும் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கே செல்லாத ரவீந்திரநாத் தாகூர் தான் கல்வி நிறுவனங்களை நிறுவி, கல்வியின் மகத்துவம் பற்றிய பார்வையை உலகிற்கு உணர்த்தினார் என அரசியல் விமர்சகரான ஸ்வப்பன் தாஸ் குப்தா ட்விட் செய்துள்ளளார்.


நன்றி- ஒன் இந்தியா
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே! கவர்ச்சியானவர் ?

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 28th, 2014, 5:59 pm

ஹையோ ஹையோ ..........

:D :D :D :D :D :D :D
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே! கவர்ச்சியானவர் ?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 29th, 2014, 11:33 am

கவி ஆள பார்த்தவுடன் சிக்கிறாரே .... ஒரு வேலை அழகில் சிக்கிட்டாரோ.

என்ன கருமம் இது ஆங்கிலமும் ஹிந்தியும் நல்ல பேச தெரிந்தால் கல்வித்துறைக்கு தலைவராகி விடலாமோ ?

இது உண்மையில் வேறு மாதிரி விஷயம் .... :) :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 54 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron