[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

தமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 27th, 2014, 11:31 pm

Image


இந்திய ஒரு குடும்பம், ஒவ்வொரு மாநிலமும் அண்ணன் தம்பி அக்காள் தங்கை போன்றவர்கள். இவர்களுக்கு எல்லாம் அப்பா அம்மா என்று இருவர் இருந்தாகவேண்டும் இல்லையா!, அப்பா தான்

மத்திய அரசு. அம்மா தான் மாநில அரசு. சரி மாநிலத்திற்குள் சண்டை போட்டுகொண்டால் மத்திய அரசு.. அதுதாங்க அப்பா என்ன சொல்வார்? "ஏன் ஒரே குடும்பத்திற்குள் சண்டைபோடுகிட்டு சாவுறீங்க? நீங்கள் எல்லாம் சகோதரர்கள் இல்லையா? சண்டை போடவேண்டாம்" என்று அம்மாவிடம் சொல்லி சமதானப்படுத்துவார்.

ஒருநாள் ஒரு தாயின் பிள்ளை பக்கத்துக்கு வீட்டில் விளையாடும்போது அந்த வீட்டுப் ஆம்பளை அந்த பிள்ளையை எதோ ஒரு காரணத்திற்காக கொலை செய்து விடுகிறார், இதை அறிந்த அந்த தலைப்பா கட்டிய அப்பனுக்குக் கோவம் வந்து எப்படி என் மகனை கொல்லலாம் என அந்த வீட்டுக்காரனை உண்டு இல்லை என்று ஆக்கி, வழக்கு போட்டு கொன்றவனைச் சிறையில் அடைத்துவிட்டார். அதேபோல் இன்னொரு தாயின் பிள்ளைகள் ரெண்டு வீட்டு தள்ளி இன்னொரு வீட்டில் விளையாடும்போது அந்த வீட்டுப் பெண்ணைக் கேலி செய்ததாக அந்த வீட்டுக்கார ஆம்பளை ஒரு பிள்ளையை அடித்துவிட்டார். அப்போதும் அதே அப்பன் அந்த வீட்டுக்காரனை பஞ்சாயத்துபோட்டு சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கி... நஷ்ட ஈடா பணமும் வாங்கிவிட்டார். இதுபோல் பக்கத்து வீட்டில், பாகத்து ஊரில் அவருடைய உறவுகளுக்கு எதாவது பிரச்னை என்று வந்தால் முதல் ஆளாக நின்று நியாயத்தைக் கேட்பார்.

அப்புறம் இருக்காத பின்னே அவருடைய பிள்ளைகள் தானே ரத்த பாசம் இருமில்ல? அது எப்படிப் பக்கத்துக்கு வீட்டுக்கு போனாலும் அப்பன் மகன், அப்பன் மகள் என்ற உறவு விட்டுபோயிடுமா? என்று கேட்பது 100 க்கு 100 சரி தான். நியாயம் கூட.

ஆனால் அதே அப்பன் ஒரு அம்மா வயிற்றில் பிறந்த பிள்ளைகளை மட்டும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் தெருவில் வரும்போதும் போகும்போதும் பக்கத்துக்கு வீட்டுக்காரன் எப்போதும் அவர்களை அடித்துத் துவைப்பது வழக்கம். அந்தப் பிள்ளைகள் தன தாயிடம் "அம்மா... அப்பாவிடம் சொல்லி பக்கத்துக்கு வீட்டுக்காரனை கேக்க சொல்லுமா... ரொம்ப நாளா அடுச்சுகிட்டே இருக்காமா.." எனச் சொன்னார்கள். ஆனால் அந்த இரக்கமில்லாத அப்பன் அடித்தவனை கேட்க்காமல், பிள்ளைகளை கூப்பிட்டு "நீங்க எண்டா அந்தப் பக்கம் போனீங்க" என்று பதிலுக்கு அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரன் போல அடித்துத் துவைத்துக் காயப்போடுள்ளார். இதை அறிந்த அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் சரி நம்ம இவர்களை அடித்து அடித்து விளையாடலாம், நம்ம பிள்ளைகளிடம் சொல்லி அவர்களையும் அடித்து அடித்து விளையாட சொல்லலாம்.. இவர்கள் அப்பன் ஒரு சப்பை எனத் நினைத்து அதை தன் பிள்ளைகளிடம் சொல்லி, அன்றிலிருந்து அவனும் அவன் பிள்ளைகளும் இந்த பிள்ளைகளை அடித்து அடித்து விளையாடுவதைப் பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.

பாவம் பிள்ளைகள் தானே என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் அம்மாவிடமும் அப்பாவிடமும் அடிப்பதை சொல்லி அழுதுள்ளனர். அம்மாவால் என்ன செய்யமுடியும். வீட்டில் இருக்கும் ஆம்பளை தன் குழந்தைகளை மட்டும் வேற ஒருவருக்குப் பிறந்தது போலப் பார்க்கும்போது பெண்ணான நம்மால் என்ன செய்ய முடியும்.. ஆம்பள சரியில்லையே... எங்கு பொய் சொல்வது என்று மனதினுள் புழுங்கியபடி கடவுள் தான் காப்பாத்தனும் என்று வேண்டிக்கொண்டு காலத்தை கடத்தியுள்ளனர்.

ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரன் தன் பிள்ளைகளுடன் சென்றது இந்த பிள்ளைகளை அடித்து விளையாடும் போது அடிதாங்காமல் 4 பிள்ளைகள் இறந்துவிடுகின்றனர்.

இதை அறிந்த அப்பன் கோவம் கொண்டு பொங்கி எழுந்து எப்படிடா என் பிள்ளையைக் கொல்லலாம் என்று கொன்றவனை கேட்டு, நீதிமன்றத்தில் ஏற்றி தூக்குத் தண்டனை வாங்கித் தந்திருப்பான் பிள்ளைகள் மீது உண்மையான பாசமுள்ள அப்பன். ஆனால் அவ்வாறு செய்யவில்லை மாறாக எதுவும் தெரியாதது போல இருந்தான்.

அம்மாவும் மற்ற பிள்ளைகளும் "அப்பா.. இப்படிப் பக்கத்துக்கு வீட்டுகாரன் இப்படி பண்ணிட்டானே.. நீங்க ஏன் இன்னமும் கேக்காம இருக்கீங்க...கேளுங்க " என்று கெஞ்சியபோது, அப்பன் சொல்கிறான் "நான் அவங்களிடம் அப்பவே சொன்னேனே அந்த வீட்டுப் பக்கம் போகாதே.. போகாதேனு... கேக்கல.. போயிட்டாங்க.. இப்ப உயிர் போச்சு.... அதுக்கு நான் என்ன செய்யறது" என்று சொல்லிவிட்டு வேலைக்கு போய்விட்டான். மற்ற பிள்ளைகள் அடிபட்டாலே துடிக்கும் அந்த அப்பன் இறந்துபோனவர்களுக்கு ஒரு துளி கண்ணீர்கூட விடவில்லை, அதை பற்றி வருத்தவும் இல்லை.

இப்படியே காலங்கள் போக.... கொஞ்ச நாளுக்கு அப்புறம் தன் பிள்ளையை அடித்துகொன்ற பக்கத்து வீட்டுகாரனிடம் அந்த அப்பன் கொஞ்சி கூலவ ஆரம்பித்தான். இதை இறந்து போன பிள்ளைகளின் அம்மா தவறு என்று சொல்லியும் கேட்காமல் சொந்தக்காரனை போல பழக ஆரம்பித்தான்.

கடைசியில் ஒருநாள் அந்த அப்பன் தன் வீட்டு காதுகுத்துக்கு கொலைசெய்த பக்கத்து வீட்டுக்காரனுக்குப் பத்திரிக்கை வச்சு "நீங்க வந்தா தான் என் குழந்தைகள் காத்து குத்திக்கும் என்று சொல்லுறாங்க.." என்று காலில் விழுகாத குறையக் கெஞ்சி காதுகுத்துக்கு வரசொன்னார். இதை அறிந்த அந்த இறந்த குழந்தைகளின் தாயும் அவர்களின் சொந்தமும், பிள்ளைகளும் "எப்படி எங்களை அதாவது உங்கள் பிள்ளைகளைக் கொன்ன கொலைகாரனை வீட்டு காதுகுத்துக்கு அழைக்கலாம் .... எப்படி உங்களுக்கு மனசு வருது" என்று சண்டை போட , அப்பனோ "இதோ பாருங்க நான் உங்க அப்பா... நான் சொல்லுறத கேளுங்க... அவன் வியாபாரத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். உங்களுக்காக என் வியாபாரத்தைக் கெடுத்துக்க முடியாது... நீங்க காதுகுத்துக்கு வரலன ... எனக்குக் கறியும் சோறும் மிச்சம்" என்று சொல்லிட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு ஒளியும் ஒலியும் அமைக்க முன்பணம் கொடுக்க போய் விட்டார்.

இந்தப் பிள்ளைகளும் அம்மாவும் மற்றும் கொஞ்ச சொந்தக்காரங்களும் சேர்ந்தது கொலைகாரனை காதுகுத்துக்குக் கூப்பிடகூடாது என்று வீதியில் அழுது புலம்பி போராட்டம் நடத்தினர். அதிலும் ஒரு பிள்ளை காதுகுத்து நடக்கும் இடத்திற்கே போய் நியாயம் கேட்டது. பாவி தன் பிள்ளை, தன் மனைவி, தன் சொந்தம், தன் ரத்தம் என்று கொஞ்சமும் மனிதத்துவம் இல்லாத அந்த அப்பன் அவருடைய மற்ற மனைவியின் குழந்தைகளுக்குக் கொலைகாரன் மடியில் வைத்து காதுகுத்தி கறியும் சோறும் சாப்பிட்டு, நியாயம் கேட்க வந்த பிள்ளையை மரத்தில் கட்டிவைத்துவிட்டார்.

அந்தப் பிள்ளைகளுக்குத் தெரியாது அந்தக் கொலையைச் செய்யச் சொன்னவனே அவர்களுடைய அப்பன் தான் என்று. கொலை செய்யக் கத்தி கொடுத்து அனுப்பியதும் அவன் தான் என்று.

இந்த கதை உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். ஒரு பிள்ளைக்கு கண்ணில் எண்ணையும் மற்றொரு பிள்ளைக்கு மண்ணையும் போடும் இந்த அப்பனை என்ன சொல்லி திட்டுவது. பிள்ளைகளைவிட கொலை செய்தவனுடன் வியாபரம் செய்வது தான் முக்கியம் என நினைக்கும் இந்த அப்பனை என்ன சொல்வது. இவ்வாறு தொடர்ந்து ஒரு தாயின் பிள்ளைகளை வஞ்சிக்கும் அப்பனை பற்றி பிள்ளைகள் என்ன நினைப்பார்கள். இதை எல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

இது ஒரு தொடர் கதை இந்த கதையை மேற்கொண்டு நீங்கள் தான் தொடர வேண்டும் ...

தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: தமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 28th, 2014, 9:43 am

வெறுப்பும் கோபமும் தான் ஏற்படுகிறது
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: தமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 28th, 2014, 11:16 am

  ஒரு தொடர் கதை இந்த கதையை மேற்கொண்டு நீங்கள் தான் தொடர வேண்டும் ...  



  ஒரு பிள்ளைக்கு கண்ணில் எண்ணையும் மற்றொரு பிள்ளைக்கு மண்ணையும் போடும் இந்த அப்பனை என்ன சொல்லி திட்டுவது. பிள்ளைகளைவிட கொலை செய்தவனுடன் வியாபரம் செய்வது தான் முக்கியம் என நினைக்கும் இந்த அப்பனை என்ன சொல்வது. இவ்வாறு தொடர்ந்து ஒரு தாயின் பிள்ளைகளை வஞ்சிக்கும் அப்பனை பற்றி பிள்ளைகள் என்ன நினைப்பார்கள். இதை எல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  


இது கதை அல்ல கண்ணீர் ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 62 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]