[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ராஜபக்‌ஷவை புதுடில்லிக்கு அழைத்தமை புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்! 'தினமணி' நாளிதழ் வரவேற்கிறது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

ராஜபக்‌ஷவை புதுடில்லிக்கு அழைத்தமை புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்! 'தினமணி' நாளிதழ் வரவேற்கிறது

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 26th, 2014, 5:35 pm

Image

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் தனது பிரதமர் பதிவியேற்பு நிழ்வுக்கு நரேந்திர மோடி அழைத்துள்ளமை புத்திசாலித்தனமான காய் நகர்த்தல் என்றும் நல்ல இராஜதந்திரம் என்றும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் 'தினமணி' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக அந்தப் பத்திரிகை இன்றைய இதழின் ஆசிரிய தலையங்கத்தில் 'வேண்டாமே விவாதம்!' என்ற தலைப்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அப்டியே வருமாறு:-

இதுவரை தேசிய அரசில் அங்கம் வகிக்காதவர், வெளிவிவகாரக் கொள்கை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர் என்றெல்லாம் கருதப்பட்ட ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் இந்த அளவுக்கு ராஜதந்திரமாகத் தனது பிரதமர் பொறுப்பில் செயல்படுவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. தீவிர இந்துத்துவ கொள்கையாளர், பாகிஸ்தானிய எதிர்ப்பாளர் என்றெல்லாம் நரேந்திர மோடி மேலைநாட்டு ஊடகங்களால் வர்ணிக்கப்படும், அவர் பிரதமரானால் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணு ஆயுத யுத்தம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டும் இருந்த வேளையில், அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி.

தனது தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் செல்வேன் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த மோடி, இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்க அண்டை நாடுகளுடனான சுமுக உறவு இன்றியமையாதது என்று புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

கடந்த 2012-13, 2013-14 நிதியாண்டுகளில் பாதுகாப்புக்காக நமது நிதி நிலை அறிக்கைகளில் செய்யப்பட்டிருந்த ஒதுக்கீடு முறையே ரூ.1,93,407 கோடியும், ரூ.2,03,672 கோடியும். ஆண்டுதோறும் ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாயை ராணுவத்துக்காக நாம் செலவிடுகிறோம். அண்டை நாடுகளுடன் இந்தியா சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளுமேயானால், இந்த ஒதுக்கீட்டில் பாதித்தொகை நமது கட்டமைப்பு வசதிகளுக்குப் பயன்படும். இதை நரேந்திர மோடி உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விட்டன.

மத்திய ஆசிய நாடுகள் "எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள்' என்கிற பெயரில் ஒருங்கிணைந்திருக்கின்றன. கிழக்காசிய நாடுகள் "ஆசியான்' என்கிற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்படி அண்டை நாடுகள் ஒன்றுபட்டால் மட்டுமே இன்றைய சர்வதேச அரங்கில் எந்தவொரு பகுதியும் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும் என்கிற நிலைமை. இந்தியாவில் இந்திரா காந்திக்குப் பிறகு துணிவும், திறமையுமுள்ள ஒரு நல்ல தலைமை அமையாமல் போனதால்தான் தெற்கு ஆசியா மட்டும் பிரிந்து கிடக்கிறது.

நரேந்திர மோடியின் நல்லெண்ணத்தை, அவரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட பாகிஸ்தான் புரிந்துகொண்டு, பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி ஏற்பு விழாவுக்கு வர இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் ராஜபட்ச பதவி ஏற்பு விழாவுக்கு வருவதற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் வருவது மிகவும் வருத்தத்திற்குரியது. நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசு, அவர் பிரதமரானவுடன் ராஜாங்க ரீதியிலான அழைப்பு விடுத்திருப்பதை நமது தமிழகத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று உலக நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் குரல் கொடுக்கலாம். ஆனால் அவர் இலங்கை அதிபரல்ல என்று ஆகிவிடுமா? அவருடன் பேசமாட்டோம், அவரை அழைக்க மாட்டோம் என்று நாம் முடிவெடுத்தால், போருக்குப் பின் வாழத் துடிக்கும் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் உயிருடன் இருக்கிறார்களே, அவர்கள் கதி என்ன? நாளும் பொழுதும் நமது மீனவர்கள் சிறைபிடிக்கப் படுகிறார்களே, அவர்களைப் பாதுகாப்பது எங்ஙனம்?

கோடிக்கணக்கில் இலங்கையின் வடக்குப் பகுதியைப் புனர் நிர்மாணம் செய்ய இந்தியா வழங்கிய பணம், இலங்கையின் தென் பகுதியை வளப்படுத்துவதாகக் கூறப்படுகிறதே, அதைக் கண்காணித்துத் தட்டிக் கேட்பது எப்படி? அதிபர் ராஜபட்சவின் செயல்பாடுகள் ஏற்புடையவை அல்லதான். அதற்குத் தீர்வு இலங்கையுடன் போர் தொடுப்பதல்ல, அவரை அழைத்துப் பேசுவது, பணிய வைப்பது. அதிபர் ராஜபட்சவுடன் பேசாமல் இருப்பதாலோ இலங்கையை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாலோ நாம் சாதிக்கப் போவது என்ன என்பதை தமிழக அரசியல் கட்சிகள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளன.

கடைசியாக ஒரு வார்த்தை. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, பாகிஸ்தானும் இலங்கையும் நமது அண்டை நாடுகள். அந்த நாடுகளுடன் நட்புறவு பாராட்டி நாம் இயங்கியாக வேண்டும். ஆப்பிரிக்காவுக்கு அப்பால், அல்லது அண்டார்டிக்காவுக்குப் பக்கத்தில் விலகிப் போ என்று சொல்ல முடியாது. ஈழத்தில் போர் நடந்தபோது மத்திய அரசில் அங்கம் வகித்து மெளனம் காத்து துரோகம் இழைத்தவர்களையே நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இன்னொரு நாட்டு அதிபரான ராஜபட்சயை கண்டிக்க நினைக்கிறோமே, என்ன வேடிக்கை இது? புதிய பிரதமர் புத்திசாலித்தனமாகக் காயை நகர்த்த எத்தனிக்கிறார். அவரது ராஜதந்திர நடவடிக்கைக்கு, நமது தமிழக அரசியல் கட்சிகள் முட்டுக்கட்டை போடாமல் இருக்கக் கடவது!


நன்றி-தினமணி
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: ராஜபக்‌ஷவை புதுடில்லிக்கு அழைத்தமை புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்! 'தினமணி' நாளிதழ் வரவேற்கிறது

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 26th, 2014, 6:02 pm

அண்டை நாடுகளுடன் நாம் இணக்கமான சூழல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாது இருப்பது இந்தியா போன்றதொரு மனிதவளம் மிக்க அரசுக்கு இழிவாகும்

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.....


நண்பர்களே இந்த நாளிதழின் தலைப்பில் சில வாசகங்கள் இருப்பதை பாருங்கள்..
இந்த நாளிதழுக்கும் இந்த வாசகத்திர்க்கும் என்ன தொடர்பு என கொஞ்சம் சிந்தியுங்கள்..

கடந்த காலங்களில் பல நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் மக்களை திசை திருப்பும் நோக்கில் பல கையாடல்களை செய்துவருகின்றன...
  இந்த கட்டுரை வேண்டுமென்ற அதிகார வர்க்கத்தால் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது என்பது இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளின் நுணுக்கங்களை கொஞ்சம் உற்று கவனியுங்கள் உங்களுக்கே புரியும்  
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: ராஜபக்‌ஷவை புதுடில்லிக்கு அழைத்தமை புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்! 'தினமணி' நாளிதழ் வரவேற்கிறது

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 26th, 2014, 6:07 pm

நல்ல பயிர் இடையே களைகள் வருமல்ல,.... அதுபோல தான் நம்மில் சிலர் பேசுகின்றனர். தமிழ் இனத்தின் துரோகிகள் சிங்களவன் என்பதைவிட சமூக உணர்வுடன் போராடும் சிலரால் கிடைக்கும் ஆதாயங்களை உட்கார்ந்துகொண்டு அனுபவிக்கும் திருந்தாத தமிழ் ஜென்மங்களும் பத்திரிக்கைகளும் தான். நாட்டில் என்ன நடந்தது/ நடக்கிறது/நடக்கும் என எதுவுமே சித்திக்காமல் பெரிய கட்சிக்கு ஜால்ரா போடுவதும், வடநாட்டுகாரனை தூக்கி வைத்துகொண்டு ஆடுவதும் நம்மவரில் பலருக்கும் வேலையாக இருக்கிறது.

என்ன ராஜதந்திரம் வேண்டியிருக்கு இந்த இரண்டு துக்கட நாடுகளிடம். காக்க கழிய பனம்பழம் விழுந்தால் அதற்க்கு பெயர் ராஜதந்திரமா?. இந்த அழைப்பு விவகாரத்தில் மலையாளிகளின் தான் பின்புலத்தில் இருக்கிறார்கள். உண்மையில் சிங்களவன் ராஜபக்ஷே வெற்றி பெறவில்லை. தமிழனை அழிக்கும் மலையாள பச்சோந்திகள் தான் வெற்றிப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒரு மாநிலம். மத்திய அரசுக்கு என்று தனியாக ஒரு நாடும் கிடையாது, எல்லா மாநிலங்களின் தொகுப்பு தான் மத்திய அரசு. நாம் சொல்லும் வேலையை செய்யத்தான் மத்திய அரசோ தவிர, அவர்கள் செய்வதை நாம் பின்பற்றினால் ஜனநாயக நாடு என்று சொல்வது தவறு.

ஒரு மாநில மக்களின் மனதை புரிந்துகொள்ள தெரியாத காரணத்தினால் தான் காங்கிரஸ் இதுவரை தமிழ்நாட்டில் செல்லாகாசாக உள்ளது. இதே தவறை தான் பிஜேபி எடுத்த எடுப்பில் செய்கிறது. உண்மையில் தமிழன் என்றால் வடநாட்டினருக்கும் கில்லுகிரை என்ற எண்ணம் தான் மோடியை இப்போது ஆட்ட தொடங்கியுள்ளது.

உலகில் என் தொப்புள் கொடி உறவுகளான ஈழதமிழர்களை அழித்தொழிக்கும் எவனாக இருந்தாலும் எனக்கு எதிரி தான் என தமிழர்கள் நினைப்பது என்பது உண்மையான உணர்வு. அந்த எதிரியை நம் நாட்டில் நுளையவிடகூடாது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.

இன உணர்வு, மொழி உணர்வு இல்லாத இந்நாட்டு தமிழ் அறிவு ஜீவிகளே பத்திரிக்கைகளே, ராஜபக்ஷேவை வரவேற்க வேண்டும் எதிர்க்ககூடாது என்று சொல்லும் இனத்தை காட்டுகொடுக்க தயாராக இருப்பவர்களே, இந்த விசயத்தில் பெரும்பான்மையான கருத்து கொண்ட நாங்கள் இங்கேயே இருந்து விடுகிறோம், நீங்கள் பேசாமல் இலங்கை சென்று விடுங்கள். அதுவும் ராஜபக்ஷே வீட்டுக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்துகொள்ளுங்கள்..... நாடு தப்பிக்கும்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 66 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron