[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ஜெகன் மோகன் ரெட்டியை விட சந்திரபாபு நாயுடு அதிகம் கொடுத்தார் ! அங்கும் இங்கும் பணமே வெற்றி ! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
அரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.

ஜெகன் மோகன் ரெட்டியை விட சந்திரபாபு நாயுடு அதிகம் கொடுத்தார் ! அங்கும் இங்கும் பணமே வெற்றி !

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 22nd, 2014, 4:18 pm

Image


சில நாட்களுக்கு முன் திருப்பதியிலிருந்து சென்னை வந்த என் நண்பனை சந்திக்கச் சென்றிருந்தேன். திருப்பதியிலேயே தங்கி வேலை செய்து வருபவன் என்பதால், அவனிடம் ஆந்திர அரசியல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பது திட்டம்.

ஆனால் அவனோ தேர்தல் பற்றி பேச்செடுத்தாலே எரிச்சலாக பேசினான். ”தேர்தல் எல்லாம் சுத்த ஹம்பக் (பொய்)” என்றான்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நான் தேர்தல் புறக்கணிப்பை பற்றி பேசினால், “அதெல்லாம் தப்பு, நாம் நிச்சயம் ஓட்டுப் போட வேண்டும், பிடிக்கவில்லை என்றால், 49-ஓ போட வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாகத் தான் இந்தியாவில் தேர்தல் நடத்துகிறது” என்பான்.

ஆனால் இப்பொழுது திடீரென்று எங்கிருந்து இந்த ஞானோதயம் வந்திருக்கிறது, ஏன்?

ஆந்திராவில் இந்த முறை தேர்தலில் பணம் பயங்கரமாக விளையாடி இருக்கிறது. பொதுவாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் தான் என்றும், அது திராவிடக் கட்சிகள் மாத்திரம் செய்யும் அசிங்கமான வேலை என்றும் நினைப்பவர்கள் உங்கள் அறியாமையை மாற்றிக் கொள்ளுங்கள்! பா.ஜ.கவுடன் புனிதக் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும், ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் ஆந்திர தேர்தல் களத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளன.

போலி ஜனநாயகத்தையே உண்மை ஜனநாயகமாக கருதும் நடுத்தர வர்க்கம் அதில் பண நாயகம் இருந்தே தீரும் என்பதை அறியும் போது வெறுக்கிறது. இது என் நண்பனின் தேர்தல் அலர்ஜிக்கு முதல் காரணம்.

மேலும் மக்களும் பணம் வாங்கியதை பற்றி அனைவரும் வெளிப்படையாகவே பேசியபடி இருந்துள்ளனர்.

இவன் வழக்கமாக டீ குடிக்கும் டீக் கடையின் சொந்தக்காரர்,”எப்படியும் ஆந்திராவை பிரிச்ச காங்கிரஸுக்கு ஓட்டு போடக் கூடாது என நான் நினைத்தேன், ஆனால் யாருக்கு போடுவது? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கா? இல்ல தெலுங்கு தேசம் கட்சிக்கா? என குழம்பிய போது, அதிக பணம் கொடுத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு எங்கள் ஓட்டை போட்டு விட்டோம்” என்றிருக்கிறார்.

“எங்கள்? என்றால் எத்தனை பேர்”

“ஆமாம் தம்பி எங்கள் வீட்டில் மொத்தம் 6 ஓட்டு”

“ஏன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பணம் கொடுக்கவில்லையா?”

“உண்மையில் சொல்லணும்ன்ன தம்பி எனக்கு ஒய்.ஆஸ்.ஆர் (ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி- முன்னாள் முதல்வர்) மேலே ஆசை இருந்தது, அதனால் தான் நான் முதல்ல அவங்க கிட்டதான் 6 ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாங்கன்னு கேட்டேன். ஓட்டுக்கு 500 ரூபா தரன்னு சொன்னாங்க, ஆனா பாருங்க தெலுங்கு தேசம் கட்சிகாரங்க ஓட்டுக்கு 1000 ரூபா தரன்னு சொல்லிட்டாங்க. நான் அப்பவும், நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.” என்றிருக்கிறார்.

Image


இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு 64 கோடி ரூபாய், ஒய்எஸ்ஆர் – ஜகன்மோகன் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து ரூ 50.9 கோடிதான் என்பதையும் இத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்தியாவிலேயே வெற்றி பெற்ற எம்பிக்களின் சொத்து மதிப்பில் முதல் இடம் வகிப்பது ஆந்திராதான். எனில் சீமாந்திராவில் சாமானியர்களுக்கான ஜனநாயகம் எப்படி இருக்கும்?

தேநீர்க் கடையில் ‘பல்பு’ வாங்கி வாயடைத்துப் போன என் நண்பன் அவன் குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரரிடம் இதை பற்றி பேசியிருக்கிறான். அவர் அரசாங்கத்தின் வருவாய் துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். தேர்தல் பணிக்கு வேறு சென்று வந்தவர்.

அவரிடம் போய் ”சார் ஓட்டுக்கு காசு வாங்கி இருக்காங்க தேர்தல் கமிஷனுக்கு இதெல்லாம் தெரியாதா?” என்று வெள்ளேந்தியாகக் கேட்டிருக்கிறான்.

அவர், ”தெரியும்ப்பா. என்ன செய்ய முடியும்? அவங்களும் மனுஷங்க தானே. இதாவது பரவாயில்லை, தேர்தல் வேலைக்கு போகும் ஆபிஸருங்க அவங்க தபால் ஓட்ட 3,000 ரூபாய்க்கு வித்திருக்காங்க.

இதுக்கு என்ன சொல்லுவ?” என்று அணுகுண்டை வீசியிருக்கிறார். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதாக நண்பனுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. அவனைப் பொறுத்த வரை ஏழைகள்தான் பணம் வாங்கி ஜனநாயகத்தை காலி செய்கிறார்கள் என்ற ஆய்வு முடிவை அவன் சார்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இரக்கமின்றி காலி செய்து விட்டார்கள்.

”தேர்தல் அதிகாரிங்களா?”

அவர் மிக தெளிவாகவும்,உறுதியாகவும், “தேர்தல் வேலையில் ஈடுபட்ட அதிகாரிங்களே தான்” என்று சொல்லியிருக்கிறார்.

“தேர்தல் கமிஷன் ஆட்களா? அப்படிப்பட்டவங்கள எப்படி சார் தேர்தல் கமிஷன் வேலைக்கு எடுத்தாங்க” என கேட்டிருக்கிறான்.

”தேர்தல் கமிஷன் ஆட்கள் இல்லப்பா. தேர்தல் பணியில் ஈடுபட்டவங்க” என்று விளக்கியிருக்கிறார்.

என் நண்பன் தேர்தல் கமிஷன் என்பது தனியான பல ஊழியர்களை கொண்ட ஒரு துறை என்று தான் இது வரை நினைத்திருக்கிறான்.

Image

தபால் ஓட்டுகள் எண்ணிக்கை

நான் இடையில் புகுந்து, “தேர்தல் கமிஷன் என்பது தனியாக இருந்தாலும், அதில் நாடு முழுவதும் ஒரு 1,000 பேர் வேலை செய்யலாம். ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும், அது தன் வேலைகளுக்காக அந்தந்த மாநில அரசு ஊழியர்களையும், போலிஸ் துறையையும், மத்திய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்கள் போன்றவர்களையும்தான் வேலை செய்ய அழைத்துக் கொள்ளும்” என்று விளக்கினேன். டொரண்டில் சுடச் சுட உலக/உள்ளூர் சினிமாக்களின் புத்தம் புதிய காப்பிகளை தரவிறக்கம் செய்யும் தொழில் நுட்ப கில்லியான என் நண்பனுக்கு இது தெரியவில்லை.

அவன் தனியாக தேர்தல் கமிஷன் எனும் துறையில் ஆயிரக்கணக்கான நேர்மையான் அதிகாரிகள் கீழ்மட்டம் வரை வேலை செய்து தேர்தலை நேர்மையாக நடத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் போலவே பலரும் உள்ளனர்.

நம் அரசு அலுவலகங்களில் 100, 500 என்று லஞ்சம் வாங்குபவர்கள், பிள்ளைகளுக்கு பொறுப்பாக பாடம் சொல்லிக் கொடுக்காமல், சம்பளம் மட்டும் குறியாக வாங்கி அதை வட்டிக்கு விடும் ஆசிரியர்கள் போன்றவர்கள்தான் கூடுதல் வருமானத்துக்காக தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்கள்.

பொறுமையாக கேட்ட என் நண்பன், “என் வீட்டு சொந்தக்காரரும் இதைத்தான் சொன்னார். சரி உனக்கு தபால் ஓட்டுன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டான்?

நான் தெரியும் என்றேன். “தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள், போய் அவர்கள் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பணியிடத்தில் இருந்தபடி மேலதிகாரி ஒப்புதலுடன், தபாலில் வாக்கு செலுத்தலாம். இவை மாத்திரம் வாக்கு சீட்டு வடிவத்தில் இருக்கும்” என்றேன்.

“ஆமாம் இதுவும் என் வீட்டு ஓனர் சொல்லி தெரிந்து கொண்டேன். என் வீட்டு ஓனர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் தபால் ஓட்டுக்கள் எண்ணும் போது 200-க்கு 50 ஓட்டுக்கள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்கள். அங்கே வந்த தெலுங்கு தேசம் கட்சி ஏஜென்ட், யாரையோ அசிங்க அசிங்கமாக திட்டத் தொடங்கி விட்டாராம்”

”சரி தான். தங்கள் கட்சிக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவையாக இருந்தால் கோபம் வரத் தானே செய்யும். அதுவும், படித்த அரசு ஊழியர்களே செல்லாத ஓட்டுக்கள் போட்டால் நிச்சயம் கோபம் தலைக்கு ஏறும்”

“அது தான் இல்லை. அவர் அந்தந்த இடங்களில் வேலை செய்த தம் கட்சிக்காரர்களை தான் திட்டியுள்ளார்.”

“ஏன்?”

“ஒவ்வொரு அரசு அதிகாரியிடமும் போய் தனித் தனியாக விலை பேசி தபால் ஓட்டுக்களை வாங்கி இருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு குறைந்த பட்சம் ரூ 2,000 முதல் ரூ 4,000 வரை வாங்கிக் கொண்டு அரசு ஊழியர்கள் விற்றுள்ளார்கள். பலர் ஓட்டுக்களை தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டுவிட்டு, வாக்குச் சீட்டில் அதில் மேலதிகாரி கையெழுத்து வாங்கி சமர்த்தாக கொடுத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் செல்லும். சில ஊழியர்கள், விசுவாசம் அதிகமாகி, கட்சிக்காரர்களிடமே ஓட்டுச் சீட்டை கொடுத்து விட்டார்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு டிக் அடிக்க தெரிந்த கட்சிக்காரர்களுக்கு அதில் மேலதிகாரி (கெஸ்டட் ஆபிஸர் ) கையெழுத்து வாங்க வேண்டும் என்ற அறிவில்லை. அவை அனைத்தும் காசு கொடுத்தும் செல்லாதவை ஆகிவிட்டன” என்றான்.

எனக்கே கொஞ்சம் தூக்கி வாரி போட்டது. இந்த அரசு ஊழியர்கள் தான் தேர்தலை நேர்மையாக நடத்தி இருப்பார்கள் என்று நினைத்து ஜனநாயக கோவிலுக்கு ஐந்து வருடத்திற்கொரு முறை விரதமிருந்த என் நண்பனுக்கு கடவுளும் ஃபிராடு, பூசாரியும் கேடு என்ற அறிவு வந்திருப்பது ஒரு சிறு மகிழ்ச்சி.

“பாருடா உங்கள் தேர்தல் லட்சணத்த” என்று நான் சிரித்தேன்.

அவன் “அது பரவாயில்லைடா, நான் என் ஓனருகிட்ட, நீங்க ஏதும் காசு வாங்கலையான்னு கேட்டேன்” என்றான்.

“ஆமாம், அவர் எவ்வளவு வாங்கினாராம்”

வீட்டு ஓனர் ”இந்த விஷயம் எனக்கு தெரியாமலேயே நடந்திடுச்சி. தெரிஞ்சா நான் ஒரு 3,000 ரூபா தேத்தியிருப்பேன். ஆனா அடுத்தமுறை நிச்சயம் ஒரு 4000-ஆவது தேத்திடனும்” என்றிருக்கிறார்.

கோபமான என் நண்பன் அவரிடம் ”சார் நீங்களுமா இப்படி பேசுறீங்க. அவங்க எதுக்கு இவ்வளவு காசு செலவு பண்றாங்கன்னு யோசிச்சிங்களா. புது ஆந்திராவுக்கு தலை நகர் உருவாக்கணும். தலை நகர் உருவாக்குறதுன்னா, எவ்வளவு கட்டுமான வேலைகள், எவ்வளவு ரியல் எஸ்டேட், எவ்வளவு கான்டிராக்ட். கோடிகள் விளையாடும். 3,000 முதல் போட்டு கோடிகள் சம்பாதிப்பாங்க.” என்று சிறு பிரசங்கம் நடத்தியிருக்கிறான்.

அதை கேட்டு அவர் முகம் வாடி விட்டது, எதையோ யோசித்தவராக தலை குனிந்திருக்கிறார்.

என் நண்பனுக்கு ஒருவராவது திருந்தி விட்டார் என்று ஒரு மகிழ்ச்சி. அவர் மெல்ல “நீங்க சொல்றது சரி தான் பாபு, நான் இதை யோசிக்கல. எவ்வளவு பணம், எவ்வளவு கான்டிராக்ட், பல நூறு கோடிகள் கொள்ளையடிச்சிடுவாங்க.. ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்தாதான் தான் என் தபால் ஓட்ட போடுவேன்” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

பிறகு என் நண்பனுக்கு போலி ஜனநாயகம் குறித்து மாங்கு மாங்குவென்று விளக்கம் கேட்கும் அவசியமில்லாமலேயே வீட்டுக்கு வெளியே இருந்த புளியமரத்தடியில் ஞானம் பிறந்தது.

இதுதான் என் நண்பன் தேர்தல் மாயையில் இருந்து விடுபட்ட கதை.
சரி, விடுங்கள். நீங்கள் ஞானம் பெற்றவரா இல்லை யானை பெற்றவரா?


நன்றி- வினவு
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: ஜெகன் மோகன் ரெட்டியை விட சந்திரபாபு நாயுடு அதிகம் கொடுத்தார் ! அங்கும் இங்கும் பணமே வெற்றி !

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 22nd, 2014, 8:35 pm

டேய் நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. நீங்க மட்டும் இவ்வளவு பணத்தை எங்கடா வச்சிருகிறீங்க......

முதலில் நம்ம நாட்டு மக்கள் நாசமா போகட்டும்.... அப்போ கூட திருந்துவார்களா என தெரியவில்லை
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அரசியல் (Political)

Who is online

Users browsing this forum: No registered users and 5 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 66 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron