[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்!!!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்!!!!

படிக்காத இடுகை [Unread post]by Raja » மே 11th, 2014, 9:59 am

"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை' மற்றும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே' ஆகிய பாடல் வரிகள் அன்னையின் சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துகிறது. மனித வடிவில் வந்த தெய்வமாக அன்னையர் கருதப்படுகின்றனர். நாம் இவ்வுலகை காண காரணமும் அன்னை தான்.

பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு, அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே மாதம் 2வது ஞாயிற்றுகிழமை (மே 11), சர்வேதச அன்னையர் தினம் காண்டாடப்படுகிறது. இன்று அன்னைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

எப்படி வந்தது :பண்டைய கிரீசில், "ரியா' என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபட்டனர். ரோமிலும் "சிபெல்லா' என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். நவீன அன்னையர் தினம், முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.அன்னையின்றி எவருமில்லைசமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர். அன்னையை போற்றாத எவரும், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி, நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இவ்வளவு பெருமை மிகுந்தை அன்னையரை, கடைசி வரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை.

பத்து மாதங்கள் என்னை
பக்குவமாய் சுமந்து
பல துன்பங்கள் தாண்டி
பாசமாய் பெற்றெடுத்து
பாரினிலே என்னை
பலர் முன் அறிமுகம் செய்த - என்
பாசமான அன்னையே!

இன்று உனக்கென
அன்னையர் தினமாம்!
அகிலத்தில் எம்மை
ஆளாக்கி காட்டிய உனக்கு
இன்று மட்டும் தான்
அன்னையர் தினமா?
ஆயுள் முழுவதும்
தினமும் வாழ்த்தினாலும்
ஈடாகுமா இங்கு
உனக்கு பட்ட கடன்?

பசியோடு நீ அங்கு
பட்டினியாய் இருந்தாலும்
பாசத்தோடு உதிரத்தை
பாலாக்கி ஊட்டுவாய்
பசி தீர்ந்து உனை பார்க்கும்
பாலகனை அணைத்திடுவாய்


பள்ளிக்கு எமை எல்லாம்
பாசமாய் வழி அனுப்பி
பக்குவமாய் வரும் வரை
பரிதவிப்பாய் காத்திருப்பாய் - உன்
பார்வையிலே எம் பிம்பம்
பட்டதுவும் ஓடி வந்து
பாசமாய் கட்டியணைத்து
பல முத்தங்கள் நீ சொரிந்திடுவாய்


இத்தனைக்கும் பாசமான
என் இனிய அன்னையே
உனக்கான நாளினிலே
உரிமையோடு வாழ்துகிறேன்
உரித்தாகுக வாழ்த்துகள்

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்!!!!

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 11th, 2014, 2:41 pm

பத்து மாதங்கள் என்னை
பக்குவமாய் சுமந்து
பல துன்பங்கள் தாண்டி
பாசமாய் பெற்றெடுத்து
பாரினிலே என்னை
பலர் முன் அறிமுகம் செய்த - என்
பாசமான அன்னையே!

இன்று உனக்கென
அன்னையர் தினமாம்!
அகிலத்தில் எம்மை
ஆளாக்கி காட்டிய உனக்கு
இன்று மட்டும் தான்
அன்னையர் தினமா?
ஆயுள் முழுவதும்
தினமும் வாழ்த்தினாலும்
ஈடாகுமா இங்கு
உனக்கு பட்ட கடன்?

பசியோடு நீ அங்கு
பட்டினியாய் இருந்தாலும்
பாசத்தோடு உதிரத்தை
பாலாக்கி ஊட்டுவாய்
பசி தீர்ந்து உனை பார்க்கும்
பாலகனை அணைத்திடுவாய்


பள்ளிக்கு எமை எல்லாம்
பாசமாய் வழி அனுப்பி
பக்குவமாய் வரும் வரை
பரிதவிப்பாய் காத்திருப்பாய் - உன்
பார்வையிலே எம் பிம்பம்
பட்டதுவும் ஓடி வந்து
பாசமாய் கட்டியணைத்து
பல முத்தங்கள் நீ சொரிந்திடுவாய்


இத்தனைக்கும் பாசமான
என் இனிய அன்னையே
உனக்கான நாளினிலே
உரிமையோடு வாழ்துகிறேன்
உரித்தாகுக வாழ்த்துகள்


நல்ல வரிகள் ராஜா பகிரந்தமைக்கு நன்றி ... அன்னை போல் ஒரு தெய்வம் இல்லை , தாயிற் சிறந்த கோவிலும் இல்லை , அனைவரும் தாயை போற்றிடுவோமாக !!
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to வாழ்த்துகள் (Greetings)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 64 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron