[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மே தின வாழ்த்துக்கள்!!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.

மே தின வாழ்த்துக்கள்!!!

படிக்காத இடுகை [Unread post]by Raja » மே 1st, 2014, 12:04 pm

உழைக்கும் மக்களின் உன்னத திருநாள் - மே தினம்

ஒற்றுமையின் இலக்கணத்தை உலகுக்கு உணர்த்திய நாள் - மே தினம்

ஆலை தொழிலாளி முதல் அரசு ஊழியர் வரை
அனைவரும் ஓர் இனம் என உவகை பொங்கும் பெருநாள் - மே தின நன்நாள்.

எட்டு மணி நேரம் வேலை
எட்டு மணி நேரம் ஓய்வு
எட்டு மணி நேரம் உறக்கம் என உரிமை வேண்டி
ஊமைகளாய் இருந்தோர் பொங்கி எழுந்து
உலக தொழிலாளர் ஒன்று திரண்ட சிக்காகோ நகரில்.

வானை முட்டும் தொழிலாளர்கள் கோஷங்கள்
வாளா இருப்பாரா அதிகாரத்தில் உள்ளோர்
அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டதின் விளைவு
ஆறாய் பெருகி ஓடியது செந்நீர் - சிக்காகோ நகர வீதிகளில் தன்
இன்னுயிரை செந்நீராய் உதிர்த்த தியாகிகளின் நினைவுகள்
இரத்தத்தின் நிறமே செங்கொடியாய் இயற்றும் மே தின நினைவு நாள்

அன்று போராடி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள்
தொழிலாளர் சட்டங்களால் இன்றும் அரணாய் காக்கின்றது
சும்மா கிடைத்திடவில்லை - சுதந்திரமும் - உரிமைகளும்!
இன்றைய நிலை , விடுமுறை கிட்டா வேலை பளு !
பன்னிரண்டு மணி நேர வேலை பழகி விட்டோமா ?

இன்றேனும் சபதம் ஏற்போம்
தொழிலாளர் நலம் காத்திட
கோரிக்கைகளை வென்றுஎடுக்க
ஒற்றுமை ஒன்றே ஒரே வழி !

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!!



மே தின வாழ்த்துக்களுடன்
ராஜா...
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: மே தின வாழ்த்துக்கள்!!!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 2nd, 2014, 11:12 am

தாமதமாக மே தின வாழ்த்துகளை பூச்சரம் அங்கத்தினர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

தொழிலாளராக இருக்கும் ஒருவரை முதலாளி எனும் உயர் வர்க்கத்தினர் அவனின் ரதத்தை அட்டை பூச்சிபோல் உறிஞ்சுகின்றனர். திறமைகள் மதிக்கப்படுவதில்லை. வாய் ஜாலம் உள்ளவருக்கு சலுகையும், கடின உழைப்பாளிக்கு அழுகையையும் பரிசாக கொடுகிறது இன்றைய முதலாளிகள் வர்க்கத்தினர்.

கஷ்டப்பட்டு நடப்பட்டு காளன காசையும், வரி என்ற போர்வையில் அரசும், வணிகர்களும், போக்குவரத்து துறையும், மருத்துவ துறையும், கல்வி துறை என எல்லா துறைகளும் தொழிலாளியை மீண்டும் அட்டைபோல் ரதத்தை உறிஞ்சி சாகடிகின்றன.

தொழிலாளி மட்டும் இல்லை என்றால் நாடு இயங்காது என்று சொல்வதன் அர்த்தம் இது தான்.

என்று விடிவு வரபோகிறது இந்த தொழிலாளி வர்க்கத்திற்கு. எந்தனை ஆட்சிகள் மாறினாலும், எத்தனை தலைவர்கள் வந்தாலும் இவன் நிலை மாறாது.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to வாழ்த்துகள் (Greetings)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 61 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron