[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் ..... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 24th, 2013, 2:06 pm

Image


அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் ..

உலகம் முழுவதும் நாளை ( புதன்கிழமை ) கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கென வாடிகன் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது. பெத்லகேம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது. வாடிகனில் போப் தலைமையில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

மற்றவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் பிறருக்கு செய்ய வேண்டும் . இயேசு பிரான் அவதரித்த திருநாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தமிழக முதல்வர் ஜெ., கூறியுள்ளார். இவரது வாழ்த்து அறிக்கையில்;
மனித வாழக்கையில் நம்பிக்கை என்ற சக்தி பெற்றுவிட்டால் இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசு பிரானின் போதனையின்படி நாமும் கடைபிடித்தால் வாழ்வில் நமக்கு நிச்சயம் . இயேசு பிரானின் வழியை பின்பற்றினால் நமக்கு இறைவன் அனைத்தும் வழங்குவார்.

மற்றவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் பிறருக்கு செய்ய வேண்டும். பாகுபாடின்றி அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்.

ஏழைகள் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 891 பேர் ஜெருசேலம் அனுப்பி வைக்க தமிழக அரசு நிதி வழங்கியது என்பதை இந்நாளில் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிறிஸ்துவ பெருமக்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்: இயேசு பிரான் காட்டிய அறவழியில் அன்பு வழியில் நாம் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மனித குலத்துக்கே நீதிமொழிகளையும், உபதேசங்களையும் தந்த இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை, கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக, தரணியெங்கும் கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்காகவும், அதன் உயர்வுக்காகவும், ஏழை எளிய மக்களின் பிணித் துன்பத்தைப் போக்குவதற்காகவும், பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியைப் போதிப்பதற்காகவும், ஆற்றி இருக்கின்ற அருந்தொண்டு, ஈடு இணையற்றது ஆகும். திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கணம் தந்த கால்டுவெல்; திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்த ஜி.யு. போப்; தேம்பாவணி தந்த வீரமா முனிவர்; தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு; கடற்கரை வாழ் மக்களுக்குத் தொண்டு ஊழியம் புரிந்த புனித சேவியர் அடிகளார், திருச்சபை சேவை செய்து கொலையுண்டு மடிந்த தோமையார், ஜான் பிரிட்டோ உள்ளிட்ட இயேசு சபை அருட் தந்தையரும், போதகர்களும் ஆற்றிய அரும்பணிக்கு, தமிழ் இனம் நன்றிக்கடன்பட்டு இருக்கின்றது.

உயர்ந்த இலட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக! அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறித்துவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 24th, 2013, 2:14 pm

மண்ணில் மனிதநேயம் தழைக்க, “அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று” என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் கிருஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும், இயேசு நாதரை எண்ணும்போதே, அவரது கோட்பாடுகளைப் பரப்ப வந்த அயல்நாட்டுக் குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை எவரும் மறந்திட இயலாது.

இத்தாலி நாட்டில் இருந்து வந்து தமிழ்த்துறவியாக வாழ்ந்து, “தத்துவ போதகர்” எனத் தம் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மொழியின் உரைநடைக்கு உயிர் தந்த இராபர்ட் டி நொபிலி!

அதே இத்தாலியில் இருந்து வந்து கிருத்தவத் தொண்டுகளுடன் ஏசுநாதரின் வரலாறு கூறும், “தேம்பாவணி”; தமிழுக்கு அகராதிக் கலையை அறிமுகப்படுத்திய, “சதுரகராதி” உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்த வீரமாமுனிவர்! செர்மானிய நாட்டிலிருந்து வந்து தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடத்தையும், பொறையாற்றில் காகித ஆலையையும் நிறுவி “தமிழ் - இலத்தீன் அகராதி”, “பைபிள்” தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களையும் படைத்த சீகன் பால்க் அய்யர்!

இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்து சமயப் பணிகள் ஆற்றியதுடன், “திருக்குறள்”, “திருவாசகம்”, “நாலடியார்” ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு; தம் தாயகம் திரும்பிய பின் வெளியுலகுக்குத் தமிழின் மேன்மையைப் புலப்படுத்தி, “நான் ஒரு தமிழ்மாணவன்” எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யு.போப்!அயர்லாந்து நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து நெல்லைச் சீமையில் தங்கி, “திருநெல்வேலி சரித்திரம்” எனும் ஆங்கில நூலுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் அரிய நூலையும் படைத்து; தமிழ் மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டியதுடன் தமிழைச் செம்மொழி என முதன்முதல் பறைசாற்றிய மாமேதை கால்டுவெல்! - போன்றோர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய மகத்தான தொண்டுகள் எல்லாம் என் நெஞ்சில் கிளர்ந்து எழுகின்றன.

இந்த நன்நாளில் கிருஸ்துவ சமுதாய உடன் பிறப்புகள் அனைவருக்கும் எனது கிருஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 24th, 2013, 2:15 pm

ராமதாஸ் வெளியிட்டுள்ள கிறித்துமஸ் வாழ்த்து செய்தியில், எதிரிகளையும் மன்னிக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் கிறித்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறித்துமஸ் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீது நீ அன்பு காட்டுவாயாக! என்று கூறி அன்பின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் புரிய வைத்தவர். ஆனால், இயேசு போதித்த கொள்கைகளை எல்லாம் மறந்துவிட்டு சுயநலத்துடனும், பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்குடனும் நடந்து கொள்ளும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

‘‘தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’ என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 24th, 2013, 8:01 pm

இவர்களோடு நானும் எமது நல்வாழ்த்துகளை கிறுத்துவ சகோதரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் :-gr :-gr :-gr :-gr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 25th, 2013, 12:02 am

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கவி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » டிசம்பர் 25th, 2013, 11:37 am

அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 25th, 2013, 5:07 pm

மீண்டும் நல்வாழ்த்துகள்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 25th, 2013, 8:10 pm

கரூர் கவியன்பன் wrote:மீண்டும் நல்வாழ்த்துகள்


இப்படியே வாழ்த்து மட்டும் சொன்ன எப்படி கேக் எங்கே

Image
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 25th, 2013, 8:13 pm

Image
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் .....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 25th, 2013, 8:13 pm

Image
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Next

Return to வாழ்த்துகள் (Greetings)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 50 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron