ஏற்றமாகிறது...

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum - Registration

பூச்சரம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்கு சரியான மரியாதையை கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்து பயன்பெறலாம்.
பூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்

1) சொந்தமாகக் கட்டுரை, கவிதை, கதை, இலக்கியம், நாடகம், படங்கள் போன்றவற்றிக்கு உறுப்பினர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளை ஊக்கபபடுத்த வேண்டும்.

2) பெயர் சாதி, மதம், ஆபாசம், பாலின உணர்வுகளைத் தூண்டும் வகையில் பயனர்கள் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது.

3) தங்க்லீஷ் பதிவுகள் / பின்னூட்டங்கள் பதிய கூடாது, மீறும் பதிவுகள் நீக்கப்படும். மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் போடுவதையும் தவிர்க்கவேண்டும்.

4) எந்த ஒரு நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்ற பதிவுகளை பதியவேண்டாம் .

5) ஒருவரே பல பெயர்களில் பூச்சரம் பயனர் கணக்கு வைத்துகொள்ளகூடாது. அது பற்றித் தெரியவரும் போது பயனர் கணக்குகள் முடக்கப்படும்.

6) தாங்கள் இங்குப் பதியப்படும் பதிவுகள் வேறு எதாவது தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்தத் தளப் பெயரை பதிவின் கடைசியில் கண்டிப்பாக போடவேண்டும் (எ.கா - நன்றி:தினமணி).

7) புதிய பதிவுகளை இங்குப் பகிரும்/பதியும் முன் அவை ஏற்கனவே பூச்சரத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இருப்பின் அதுபோன்ற பதிவுகளை தவிர்க்கவேண்டும்.

8) வியாபார நோக்கமற்ற பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விளம்பரம், வியாபாரம் போன்ற பதிவுகள் நீக்கப்படும் (புத்தக விமர்சனம் தவிர).

9) எவ்வித காரணத்திற்காகவும் உறுப்பினர்கள் தங்களின் கைபேசி எண்களையோ, தொடர்பு எண்களையோ, சுய மின்னஞ்சல் முகவரிகளையோ பூச்சரத்தின் அனுமதியின்றி பதிவுகளில் இணைக்கக்கூடாது.

10) கவிதையைப் பொறுத்தவரை குறைந்தது ஐந்து வரிகள் உள்ள கவிதை மட்டுமே பதிய வேண்டும். ஹைக்கூ, சென்ட்ரினோ, கசல் போன்ற வேற்று மொழி பெயர்களைக் கண்டிப்பாக இங்கு தவிர்க்க வேண்டும். சொந்த கவிதை எனச் சொல்லிக்கொண்டு இணையத்தில் எடுத்து இங்குப் பதியக்கூடாது, அதை ரசித்த கவிதை பகுதியில் பகிர்வதே சரி.

11) உறுப்பினர்கள் தளத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி தனிமடல்கள் மூலம் தொடர்புக்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்வது நமது தளத்தின் வளச்சிக்கு வழிவகுக்கும் என்பதை மறக்ககூடாது.

12) தள மேலாண்மை பற்றி எதாவது அதிருப்தியோ, குறையோ அல்லது மனகசப்போ ஏற்படுவது போல் உணர்ந்தால் அதைப் பற்றி admin@poocharam.net என்ற முகவரிக்கு அதுபற்றித் தெரிவியுங்கள். பதிவுகள் மூலமாகக் கேட்க வேண்டாம்.

13) யாரேனும் உதவியோ/சந்தேகமோ கேட்டால் அவைகளைப் பற்றித் தெரிந்தாலோ அல்லது முடியும் என்றாலோ பதில் கூறுங்கள். உதவி கேட்டவரை தேவை இல்லாமல் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம்.

14) தங்களின் நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ இங்கு உறுப்பினர்களுடன் பகிர அனுமதி உண்டு. அதையே சாதகமாக வைத்து அதிக நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ பதிவேற்றக்கூடாது.

15) உறுப்பினர்கள் அனைவரும் தள மேலாண்மைக்குக் கட்டுப்பட வேண்டும். கட்டுப்பாடுள்ள அமைப்பே சிறக்கும் என்பதை உணரவேண்டும்.

தளத்தின் விதிமுறைகளை படித்து அறிந்துகொண்டேன் மேலும் விதிமுறைகளுக்கு கட்டுபட்டுகிறேன்.

 
 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]