இட்டது: மார்ச் 30th, 2018, 10:46 am
by A.J.Gnanenthiran
ஏ.ஜே.ஞானேந்திரன்
அமிலத்தில் உடலை அழித்த அரக்கன்
Image
அவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.
குறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.
அப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை!
இவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.
தூக்கிலிடப்பட்ட சட்டம்.

தப்பிப் பிழைக்கும் காண்டாமிருகங்கள்

ஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.
ஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே! இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.
1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா!
கானகத்தின் மீட்பர்கள்
ajgswiss@gmail.com