இட்டது: ஜூன் 6th, 2014, 12:23 pm
by வேட்டையன்
Image
மனித இயந்திரம் என்றால் அனைவரின் கவனமும் அங்குதான் இருக்கும். அதுதான் அங்கும் நடந்தது. ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெலும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் கடந்த இரு தினங்களுக்கு முன் ஜேர்மனியில் நடந்த அறிவியல் மாநாட்டில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்வில் வாய்மொழியாக வரவேற்புரை நிகழ்த்திய ROBO தெஸ்பியன் அனைவரையும் தன்னை நோக்கி ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. இரு தலைவர்களும் அதனிடம் சென்று கைகுலுக்கி உரையாடினர். அதன் Bionic i-limb கைகள் 24 வகைகளில் மனிதர்களின் கையைப் பிடிக்கும் ’தசைகள்’ இருந்தன. டச் பயோனிக்ஸ் என்ற நிறுவனம் பிரிட்டனுடன் இணைந்து இந்த ROBO-வைத் தயாரித்துள்ளது.

அந்த விழாவில் ஏராளமான கணினி இயந்திரங்கள் இருந்தன. கம்பத்தைப் பிடித்துக் கொண்டு ஆடும் லெக்சி மற்றும் டெஸ் போன்ற பொழுதுபோக்கு ROBO-க்களும் அங்கு இருந்தன. அவற்றுடன் ஒரு வருடத்துக்கு முன் தயாரிக்கப்பட்ட “ ரோபோய்” என்று பெயர் சூட்டப்பட்ட ROBO உள்ளிட்ட இரண்டு ROBO-க்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. ரோபோய் ROBO-வுக்கு எலும்புகளும், தசைகளும் இருந்தன. இவை உலோகத்தாலும், கம்பிகளாலும், wire-களாலும் உருவாக்கப்பட்டவை. இது எதிர்காலத்தில் மருத்துவத்துக்கும், சந்திரனில் நடைபெறும் ஆராய்ச்சிக்கும் பயன்படக்கூடும்.

“நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ROBO கூறும் போது அதனுடைய முகத்தில் அதற்குரிய தோற்றத்தைக் காண முடிகிறது. “நான் கோபமாய் இருக்கிறேன்” என்று கூறும் போது அதனுடைய கண்கள் சிவப்பாக மாறுகிறது. சிறு குழந்தையைப் போல் தோற்றமளிக்கும் ROBO தன்னிடமுள்ள 48 தசைகளைக் கொண்டு தனது அங்கங்களை அசைக்கிறது.


நன்றி-மலரும்