இட்டது: டிசம்பர் 4th, 2016, 11:27 pm
by கரூர் கவியன்பன்
வாழ்க்கையில் அசிங்கப்படுத்தியவர்களை விட
வார்த்தைகளில் எவ்வளவு எளிதாக
அசிங்கப்படுத்தி விட முடிகிறது
சிலரால்.


கவலையில்லாதவன் மனிதன் இல்லை.
கவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.
இதில் நான் யாரோ....?


இது சாதாரணமான விசயம்
என நாம் நினைப்பது
உண்மையில் அது
சாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது
நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.


வலியை உணர்ந்தவனால் மட்டுமே
பிறர்க்கு வலியை ஏற்படுத்தாமல்
இருக்க முடியும்.காதலுக்குள் காமம் இருப்பின்
தாம்பத்தியம்
காமத்திற்குள் காதல் இருப்பின்
பைத்தியம்நல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.


வார்த்தைகள் எவ்வளவு கூரியவை
மேனி தீண்டாத போதும்
உதிரத்தை கூறாக்கி
உறுஞ்சுகின்றன
எது ஒருவனின் பலமோ
அதுவே அவனது பலவீனமாகவும்
இருக்கிறது...சேலையிலேயும்
பாவாடை தாவணிலேயும் இன்றி
ஒரு பெண்
வேறெந்த உடையிலேயும்
அவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....
மறதி என்ற ஒன்று
இருப்பதனாலேயே
இன்னமும்
மனிதனாக இருக்கிறேன்
நான்;

இருப்பினும்
மறக்க முடியாத
நிகழ்வுகளை
பரிசாக தந்துவிடுகின்றனர்
சிலர்...