இட்டது: ஏப்ரல் 29th, 2014, 12:35 am
by பிரபாகரன்
பூச்சரம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்குச் சரியான மரியாதையைக் கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களைத் தமிழ்ச் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்துப் பயன்பெறலாம்.
பலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.

அது எவ்வாறு கிடைக்கும் யாரிடம் நம் படைப்புகளைக் கொண்டுபோய்க் காண்பிப்பது. என்னதான் வலைபூக்கள், சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தத் தெரியவேண்டும்.

அப்படியே பயன்படுத்தத் தெரிந்தாலும் அங்கு நீங்கள் வேறு ஒருவருக்கு விருப்பமோ அல்லது பின்னூட்டமோ இட்டால் தான் அவர்கள் பதிலுக்கு ஒரு விருப்பமோ, பின்னுட்டமோ உங்கள் பதிவுகளுக்கு இடுவர்.

அதுவும் படைப்புகளைப் படிக்காமலேயே உங்கள் மனத்திருப்திக்காகப் பின்னூட்டம் போடும் போது, உண்மையில் உங்கள் படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகிறதா? என்றால் நிச்சயம் இல்லை.

போலித்தனமான இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் உங்கள் நேரத்தை செலவிட்டு நாமே நம்மை ஏமாற்றிக்கொள்வதை காட்டிலும் இதுபோன்ற புறவங்களில் (Forum) களில் உங்கள் பதிவை பதிவிடுவதன் மூலம் உண்மையான விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் பெறமுடியும்.

சமூக வலைதளங்களில் நீங்கள் இடும் எந்த பதிவிற்கும் ஆயுள் ஒரு நாள் தான். ஆம் நீங்கள் கஷ்டப்பட்டு போடும் இடுகைகள்(Post) அடுத்த நாள் முதலே மற்றவர்கள் பார்வைகளிலிருந்து மறைந்து விடுகிறது. அதனை தொடர்ந்து வரும்காலங்களில், இணைய தேடலில் (Web Search) கூட உங்கள் இடுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. மற்றவர்களுக்கு பயன்படாத உங்கள் இடுகைகளின் உண்மை நிலையை உணருங்கள். ஆனால் இதுபோன்ற புறவங்களில் இடும் இடுகைகைகள் அனைத்தும் இணைய தேடல்களில் (Web search) கிடைப்பதால், வரும்காலங்களில் மற்றவர்களுக்கும் பயனளிக்கிறது. உங்கள் இடுகைகள் தீர்க்காயுளை பெறுகிறது.

பூச்சரம் தளத்தின் நோக்கமே உங்களின் படைப்புகளை விமர்சித்து ஊக்கபடுத்துவதே. போட்டி பொறாமை நிறைந்துவிட்ட இக்காலத்தில் மனம் வந்து நம்முடைய படைப்புகளை நன்று என்று ஒரு வார்த்தையில் சொல்வதைக்காட்டிலும் படைப்பில் உள்ள நிறை மற்றும் குறைபாட்டை சுட்டிக்காட்டும் மனம் கொண்ட மனிதர்கள் மிகவும் குறைவு.

தளத்தில் உங்களைபோன்ற படைப்பாளிகள் பதிவிடும் கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள், செய்திகள் ... போன்ற அனைத்து படைப்புகளும் எங்களால் முடிந்தவரை உண்மையான குறை நிறைகளை சுட்டி காட்டுகிறோம்.இது மேன்மேலும் உங்கள் படைப்பை மெருகேற உதவும்.

சரி எனக்கு எந்தத் திறமையும் இல்லை, நான் என்ன இங்குச் செய்யமுடியும் என்று கேட்பவர்களும் உண்டு. நல்ல கேள்விதான், இங்குப் பதியும் பதிவுகளைப் படிக்கலாமே! அல்லது உங்களுக்குத் தெரிந்த முறையில் விமர்சனம் செய்யலாமே!.

இன்று இணையத்தில் நல்ல விசயங்களை விடக் கெட்ட விஷயங்கள் தான் அதிகம். இதுபோன்றதொரு காலகட்டத்தில் எங்குத் தேடிபிடித்து நல்ல செய்திகளைப் படிப்பது. அதுபோன்ற கஷ்டங்களே வேண்டாம் என்று தான் இங்கு, இந்தத் தளத்தில் இருக்கும் உறுப்பினர்கள் தேடிபிடித்து அறிவு சார் அறிவியல், கலை, கட்டுரை, விமர்சனம், கல்வி, உலகச் செய்திகள், அறியாத செய்திகள், உண்மை நிகழ்வுகள், அன்றாடம் நாட்டு நடப்புகள் எனக் கூடுமானவரை அனைத்து செய்திகளையும் இங்குக் பகிர்கிறோம்.

மேலும் உங்களுக்கு ஏற்படும் ஐயங்கள் (Doubt) எதுவாக இருந்தாலும் (கணணி, தரவிறக்கம், கைபேசி, மருத்துவம் ....) இங்கு பதிந்து அதற்குரிய சரியான தகவலை பெற்றுகொள்ளலாம்.

இப்படிப் பலன்கள் நிறைய உண்டு. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் இந்த பதிவு நிச்சயம் போதாது. நம் நாட்டில் மட்டும் தான் சமூக வலைத்தளங்கள் பயன்பாடு அதிகம். மற்ற வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற புறவங்களின்(Forum) பயன்பாடு தான் அதிகம். அவர்கள் நிறையச் செய்திகளை இதுபோன்ற தளங்களில் பகிர்வதுடன். அந்தப் பதிவுகள் வரும் காலங்களில் மற்றவர்களுக்கும் பயன்படும் வண்ணம் பாதுகாத்து வைக்கின்றனர்.

இதோ நம் தளத்தின் சிறப்பம்சங்கள்

- தமிழுக்கு உரிய மரியாதையை கொடுக்கும் ஒரே தளம் பூச்சரம். தமிழில் பல தளங்கள் இருந்தாலும், தளத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், பெயர்கள் போன்றவை 100% க்கு 70% ஆங்கில சொற்களே. இந்த நிலைமை மாறவேண்டும், தமிழால் எல்லாம் முடியும், நமக்கு தான் தமிழை பயன்படுத்த மனமில்லை எனும் கூற்றை மெய்யாக்கும் பொருட்டு, நம் தளத்தில் கூடுமான வரை சரியான (மற்றவர்களைப்போல் ஏனோதானோ என்றில்லாமல்) தமிழ் சொற்களை பயன்படுத்தி வருகிறோம். (தமிழ்நாட்டில் இதுபோன்றதொரு முயற்சி என்பது கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தும் இது ஒரு நல்ல முயற்சி என்று ஒரு முன்னூதாரணமாக தொடங்கியுள்ளோம்.)

- ஆங்கில தளங்களில் பயன்படுத்தப்படும் இணையுருக்கள் (Web Font) போன்று தமிழிலும் தமிழ் இணையுருக்களை பயன்படுத்துகிறோம். இதனால் பதிவுகளில் அழகு, நேர்த்தி கிடைகிறது.

- பதிவுகளை எடுவு (Editing) மற்றும் இடுவு (Composing) செய்யும் வசதிகள் ஏராளம் உள்ளன. (இவற்றில் பல வசதிகள் தமிழ் தளங்களில் முதன்முறையாக உங்களுக்கு வழங்குகிறது )

- தமிழில் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது. ஆங்கிலத்தில் தமிழ் சொல்லை தட்டச்சு செய்து இடைவெளி விட்டால் அச்சொல் தமிழ் சொல்லாக மாறும்.

- பதிவுகளை சமூக வலைதளங்களுடன் இணைக்கும் வசதி உள்ளது. இதனால் பதிவை பார்க்கும் சமூகத்தள பார்வையாளர்கள் இடும் பின்னூட்டம் நம் தளத்தில் அந்தந்த பதிவுகளுக்கு கீழே தெரியும். அதேபோல் அவகளுக்கு பதில் பின்னூட்டம் நம் தளத்தில் இருந்தே போடலாம்.

- தளத்தில் புதிய உறுப்பினர்களின் பயனர் பதிவிற்கென (New User Registration) சமூக வலைதள கணக்குளை கொண்டு பதியும் எளிமையான வசதி நம் தளத்தில் உள்ளது. இதனால் சில வினாடிகளின் பூச்சரத்தில் உறுப்பினராகலாம். - (இது தற்காலிகமாக அனைத்து வைக்கப்படுள்ளது)

- புதிய பதிவுகள், அண்மை பதிவுகள் மற்றும் இவ்வார முதன்மை பதிவர்கள் என தனி தனி இடுக்கைகள் (Widget) உள்ளது இதை கொண்டு தளத்தின் நிலவரத்தை எளிதாக அறியலாம்.

- தளத்தில் ஒரு பதிவை படிக்கும்போது அந்த பதிவுடன் தொடர்புடைய மற்ற பதிவுகளையும் காட்டும் வசதி உள்ளது.

- தேவையான பதிவுகளை அச்சிட்டு(Printing) கொள்ளும் வசதியும் மற்றும் PDF வடிவத்தில் பதிவுகளை சேமிக்கும் வசதியும் உள்ளது.

- தளத்தில் ஒவ்வொரு வாரத்திலும் பேசப்படும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்வையார்கள் மற்றும் பயனர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வாக்கு பெட்டி வசதி உள்ளது.

- பதிவுகளை வகைபடுத்தி வைத்துள்ளோம். இதனால் பதிவுகளை தேடி கண்டுபிடிக்கும் நேர விரையம் இல்லை.

- தனி நபர் மின்னஞ்சல் வசதிகள் உள்ளன. இந்த வசதி உறுப்பினரின் செயல்பாடுக்கு ஏற்றவாறு வழங்கப்படும்.

- உறுப்பினர்களின் செயல்பாடுகளை அளக்கும் விதமாக புள்ளிகள் முறை உள்ளது. அதிக புள்ளிகள் பெற்றவர், அதிக பங்களிப்பை பூச்சரதிற்கு வழங்கியுள்ளார் என்று பொருள்.

- உறுப்பினர்களின் திறமைகளை அடையாளம் கண்டுகொள்ள, பதிவில் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் (விதிமுறைகள் தவிர) இங்கு கிடையாது.

- அவப்போது புதுப்புது வசதிகள் செய்துகொடுக்கப்படும்.


எதோ ஆதாயத்திற்காக தான் நாங்கள் உங்களை அழைப்பதாக எண்ண வேண்டாம். இதனால் எங்களுக்கு எவ்வித அதாயமோ, வருமானமோ இல்லை. தளத்தில் பாருங்கள் மற்ற தளங்களை போன்று விளம்பரமோ, தேவையில்லாத பக்கங்களோ கிடையாது..

தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்காக எதாவது நல்லது செய்யவேண்டும், அச்செயல்களில் உங்களையும் இணைத்து மேலும் சிறப்பாக செயலாற்ற எண்ணியே உங்களிடம் இந்த அழைப்பினை வைக்கிறோம்.


வாருங்கள் இது உங்கள் தளம்... உங்களின் திறமைகளுக்கு சரியான ஊக்கத்தையும், மதிப்பையும், உண்மையான கருத்தையும் சொல்லும் உன்னத தளம்.

இப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை