இட்டது: ஏப்ரல் 15th, 2014, 10:14 pm
by பிரபாகரன்
பூச்சரம் உறுப்பினர்கள் தங்களின் அவதாரத்தை எவ்வாறு மாற்றுவது அல்லது எவ்வாறு ஏற்றுவது என்ற வழிமுறையை பார்ப்போம். முதலில் தாங்கள் மாற்றவேண்டிய அவதார படம் அல்லது நிழம்புவை 170X190 Px அளவில் தயார் செய்து கணனியில் கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

படத்தின் அளவை திருத்த URL is hidden from guests, please register and login to view the hyperlink படம்-1 பார்க்கவும்.


படம்-1


முதலில் புகுபதி செய்து கொண்டு, தளத்தின் மேலே வலது (Right) பக்கமுள்ள Control panel என்பதை சுடக்கி படம்-2 ல் உள்ளதுபோல் (1) Profile என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்.


படம்-2


படம்-3 ல் உள்ளதுபோல் புதிதாக திறக்கும் சாரளத்தில் profile என்ற தத்தலில்(Tab) கீழ் இருக்கும் Edit avatar என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்(1).

படம்-3


தயாராக வைத்துள்ள அவதாரத்தை படம்-4 ல் இருக்கும் வழி(3) வழியாக தேர்ந்தெடுக்கவும். அல்லது வழி (3) ல் உள்ளதுபோல் பூச்சரத்தின் Gallary ல் அவதாரத்தை தேர்ந்தெடுக்கவும்.

படம்-4


கணனியில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் அவதாரத்தை தேர்ந்தெடுப்பது.

படம்-5


தேந்தெடுக்கப்பட்ட அவதார கோப்பை படம்-6 ல் உள்ளபடி சமர்பிக்க வேண்டும்.

படம்-6


அவ்வளவு தான் தங்களின் அவதாரம் மாற்றப்பட்டுவிடும்.


- பூச்சரம் மேலாண்மை