இட்டது: ஏப்ரல் 14th, 2014, 8:51 am
by பிரபாகரன்
பூச்சரத்தின் வணக்கங்கள்,

பதிவுகளில் நேரடியாக (மற்ற தளங்களின்) படத்தின் பிணியத்தை இணைக்க கூடாது. அவ்வாறு நாம் இணைத்தால் நாம் பின்வரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

- நேரடியான அதாவது மற்ற தளங்களின் பட பிணியங்கள் அத்தளங்களில் எதோ ஒரு காரணத்திற்க்காக நீக்கப்படும்போது அதுசார்ந்த உங்கள் பதிவில் உள்ள படமும் காணாமல் போய்விடும்.

- சில தளங்கள் அப்போதைக்கு தங்களின் பிணியம் மற்ற தளங்களில் பயன்படுத்துவதை கண்டுகொள்வதில்லை, சில சமயங்களில் அது தெரியவந்து பகிர்வு தடை செய்யும்போது உங்கள் பதிவுகளில் இருக்கும் நேரடி பிணிய படங்கள் காணாமல் போய்விடும்.

- இதுபோல் நாம் தொடர்ந்து செய்யும்போது, நம்முடைய தளத்தின் வேகம் மற்ற தளங்களை வேகத்தை சார்ந்து இயங்குவது போலாகிவிடும்.

எனவே கண்டிப்பாக பதிவில் சேர்க்கப்படும் நேரடி (மற்ற தளங்களின்) படப் பிணியம் imageshack.com அல்லது imgur.com என்ற இரு இணைய தளங்களில் ஏதேனும் ஒன்றில் மூலமாக மறுமை (Convert) செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும். அது எவ்வாறு என்பதை இங்கு விளக்குகிறேன்.

imgur.com இணைய தளத்தை உலவியில் திறந்துகொள்ளுங்கள்

படம்-8 இல் உள்ள (1) அல்லது (2) படி படங்களை மறுமை செய்ய தொடங்கலாம்.

படம்-8


படத்தின் முகவரியை (Image Address) படத்தில் உள்ளது போல் (1) என்ற இடத்தில ஒட்ட(Paste) வேண்டும். ஒட்டிய உடன் படத்தை பற்றிய தகவல்கள் படத்தில் உள்ளது போல் (2) காட்டும். பிறகு Start Uploading என்ற Button-ஐ அழுத்தவும்.

படம்-9


வலது பக்க பெட்டியில் இருக்கும் உங்கள் படத்தின்(1) பிணியத்தை (2) நகல் எடுத்து பதிவில் அப்படியே சேர்க்கலாம்.

படம்-10
படம்-9 இல் உள்ள (3) உள்ள button - ஐ அழுத்தவும். பட கோப்பை தேர்தெடுக்க திறக்கும் சாரளம் வழியாக உங்கள் கணனியில் படத்தை தேர்வு செய்யவும். உடனே படம்-10 இல் உள்ளது போல் படத்தை பற்றிய தகவல்கள் (2) உள்ளது போல் காட்டும். பிறகு Start Uploading என்ற Button-ஐ அழுத்தவும்.

அவ்வளவு தான் படம்-11 இல் உள்ளதுபோல் படத்தின் மறுமை பிணியத்தை (Converted Link) பதிவுகளில் பயன்படுத்தலாம்.


இப்படிக்கு
பூச்சரம் மேலாண்மை