இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:31 am
by அ.இராமநாதன்
அந்த ஆள் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே வீடு
கட்டறார்?

அவங்க வீட்டுல எல்லோரும் சந்தேகப் பேய்களாம்..!

—————————————-

நைட்ல தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்!

உங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க,
சேட் பண்ணலாம்..!

—————————————

நாம் எதிரி நாட்டு எல்லையை அடைந்து விட்டோம்,
மன்னா!

எப்படிச் சொல்கிறாய்?

வைஃபை கிடைக்கிறதே…!!

——————————————

கட்சி போற போக்கப்பார்த்த, ஆரம்பக் கட்டத்துக்கே
போயிடுவோம் போல இருக்கே!

எப்படி சொல்றீங்க தலைவரே?

கட்சி ஆரம்பிக்கும்போது நான் மட்டும்தான் இருந்தேன்..!!

————————————–
நன்றி- ஆனந்த விகடன்