இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:26 am
by அ.இராமநாதன்
-
தலைவரு பாங்க் மேனேஜரை அடிச்சுட்டாராமே,
ஏன்?
-
சின்ன வீட்டுடன் கட்சிப்பணத்தை பாங்கில்
டெபாசிட் போடப்போனவரிடம்’இது நிரந்தர
வைப்புதானே?ன்னு மானேஜர் கேட்டாராம்!
-
ஆர்.ரகோத்தமன்
-
--------------------------------------
-
கண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன
அர்த்தம் சார்?
-
பெத்த அப்பனை சார் போட்டு கூப்பிடுறியே
இதுதாண்ட மகனே!
-
வெ.சீதாராமன்
-
---------------------------------------
-
எதிரிகள் கடற்கரை வழியாக ஊடுருவி
இருக்கிறார்கள்
அவர்களைக் கவனிக்காமல் எப்படி கோட்டை
விட்டீர்கள், தளபதியாரே?
-
அவர்கள் கச்சா எண்ணெய் சுத்தம் செய்து விட்டு
வருகிறார்கள் என்று நினைத்து விட்டேன், மன்னா!
-
ஏந்தல் இளங்கோ
-
----------------------------------------
நன்றி- குமுதம்