இட்டது: மே 30th, 2014, 11:28 am
by வேட்டையன்
Image


1977ல் வெளிவந்த “தெ கார் ” என்ற ஹாலிவுட் படம், ஆளில்லாத சகடம் ஒன்று அமெரிக்க நகருக்குள் புகுந்து செய்யும் நாசத்தை மிகவும் சிலிர்ப்பூட்டும்படி காட்டியிருந்தது. பேய் ஒட்டிவந்த சகடம் என்பதாக செல்லும் அந்தப் படக்கதை.

தொடர்புடைய விடயங்கள் நுட்பியல் ஆனால் இப்போது , உலகப் பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனம் ஆளில்லாக் சகடங்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

சகட ஓட்டிகள் செய்யும் தவறுகளை அகற்றி , சகடம் ஓட்டும் வேலையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது.

இதுவரை, கூகிள் நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், தற்போது இருக்கும் சகடங்களை மாற்றியமைத்து, சுமார் 10 லட்சம் கிலோ மீட்டர்கள் ஆளில்லாத நிலையில் ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்திருக்கிறது.

இது போல தானே ஒட்டிக்கொள்ளும் சுமார் நூறு சகடங்களை உருவாக்க கூகிள் திட்டமிடுகிறது.

இது போன்ற சகடங்களில் Streering சக்கரமோ அல்லது Padal களோ இருக்காது. சகடத்தை நிறுத்துவதற்கும், ஓட்ட ஆரம்பிப்பதற்குமான பொத்தான்கள் மட்டுமே இருக்குமாம்.

மனிதர்கள் ஓட்டாத சகடங்கள் தேவை என்று வாதிடுபவர்கள், இந்த மாதிரி நுட்பியல் வந்தால்தான் , விபத்துக்கள் குறையும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள், இந்த நுட்பியல் போக்குவரத்தையும் , நகர நெரிசலையும் மேலும் மோசமாக்கும் என்று கூறுகிறார்கள்.


 ! வேட்டையன் wrote:
குறிப்பு: Car என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ் சொல் சகடம். தமிழர்கள் தான் தமிழை பயன்படுத்தமுடியும் அல்லவா... முடிந்தளவிற்கு பயன்படுத்துவோம்


நன்றி-சிறுப்பிட்டி