இட்டது: மே 10th, 2014, 12:31 am
by வேட்டையன்
நிழம்புகளை முழு திரையில்(Full Screen) பார்க்க இந்த பக்கம் முழுமையாக ஏற்றமடைந்த (Load) பிறகு எதாவது ஒரு படத்தை சொடுக்கவும்.

வேர்ல்ட் பிரஸ் போட்டோ அலுவம்(World Press Photo Office) 1955 ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்து நகரில் இயங்கிவருகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செய்திசார் நிழம்புகளை(News Photos) தேர்ந்தெடுக்கிறது. இதன் முதன்மை பணியே நிழம்பு தாளியல்(Photo journalism) துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களின் மேம்படுத்தப்பட்ட தொழில்முறை தரம் மற்றும் இலவசமான கட்டுப்பாடற்ற செய்தி பரிமாற்றதை ஊக்குவிப்பது தான்.

வேர்ல்ட் பிரஸ் போட்டோ அலுவத்தின் நிழம்புகள்(Photos) போட்டி உலகளவில் பெரிய அளவில் பேசப்படுபவை. இந்த பதிவு கடந்த அரை நூற்றாண்டில் இருந்து சிறந்த செய்தி நிழம்புகளை உங்களின் முன் பார்வைக்கு வைக்கிறது.

இந்த படங்கள் துரதிருஷ்டவசமாக உலகத்தின் அசிங்கமான முகத்தையும் வறுமை, அறியாமை மற்றும் சுயநலத்தை வெளிப்படுகிறது.

எச்சரிக்கை இதில் சில நிழம்பு காட்சிகள் மனதை பாதிக்கும் அளவில் இருக்கும்.


ஹிட்லருக்கு வணக்கம் தெரிவிக்காத அவர்ருடைய நாஜி படை வீரன்1995ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கும் செசன்ய தீவிரவாத அமைப்புகளுக்கும் ஏற்பட்ட மோதலின் போது பேருந்தில் அகதிகளாக செல்லும் மக்களில் சாளரம் வழியாக ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவன் ஒருவன்.1995ஆகஸ்ட் 28 - டென்மார்க் மோட்டார் பந்தயத்தில் வாகனத்திலிருந்து வீரர் ஒருவர் தவறிவிழும் காட்சி1956 கிழக்கு ஜெர்மனி - இரண்டாம் உலக போரில் சோவியத் ஒன்றியத்தால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஜெர்மானிய வீரர் தன்னுடைய 12வயது மகளை 1 ஆண்டு கழித்து சந்திக்கும் உணர்வுபூர்வமான காட்சி1957 ஆம் ஆண்டு டொரோத்தி கவுன்ட்ஸ் என்ற கறுப்பின மாணவியின் முதல் நாள் அனுபவம், இது நடந்தது அமெரிக்க ஹாரி ஹார்டிங் ஹை ஸ்கூல் என்ற உயர் பாடசாலையில். அப்பாடசாலையில் சேர்க்கப்பட்ட முதல் கறுப்பின மாணவர்களில் இவரும் ஒருவர், அவளை ஆங்கில மாணவர்களால் தொல்லைக்குள்ளாகும் காட்சிசெப்டம்பர் 1958. பராகுவே மற்றும் கிரேக்கத்திற்கு இடையேயான கால்பந்து போட்டி.1960-ஜப்பான் சோசலிஸ்ட் கட்சி தலைவர் இனிஜிரோ அசனுமாவை கொலைசெய்ய போகும் வலதுசாரி மாணவர். கொலைசெய்யப்பட்ட சில நிமிடத்திற்கு முன் எடுக்கப்பட்ட நிழம்புஜூன் 4, ​​1962, புவேர்ட்டோ கபெல்லோ கடற்படை தளம். காயமடைந்து இறக்கும் தருவாயில் உள்ள வீரர் ஒருவரை மதகுரு லூயிஸ் படில்லாவால் காப்பற்ற முயலும் காட்சிஜூன் 11, 1963, சைகோன், தென் வியட்நாம். புத்த துறவி திக் குவாங் துக், அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்கும் காட்சி.எரியும் பொது இந்த துறவி அசையவுமில்லை எந்தவொரு சத்தமும் போடவில்லை.இந்த நிழம்பு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி தனது தென் வியட்நாம் அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொள்ள வழிவகுத்ததுஏப்ரல் 1964. ஹஜிவேரம், சைப்ரஸ். துருக்கி பெண் ஒருவர் தனது கணவர் கிரேக்கம், துருக்கி உள்நாட்டு போரில் போரிட்டு இறந்த துயரம் கேட்டு அழும் உருக்கமான காட்சிசெப்டம்பர் 1965, அந்தோ டின், தெற்கு வியட்நாம். தாய் மற்றும் குழந்தைகள் அமெரிக்க குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க ஆற்றை கடக்கும் காட்சி.பிப்ரவரி 24, 1966, டாங் பின், தெற்கு வியட்நாம். அமெரிக்க ராணுவம் இறந்த வியட்கொங்கின் (தெற்கு வியட்நாம் போராளி) உடலை தோல்வாரில் கட்டி இராணுவ வாகனத்தில் இழுத்து செல்லும் காட்சிமே 1967, தெற்கு வியட்நாம். போர்களத்தில் அமெரிக்க M48 பீரங்கி தளபதி. இந்த நிழம்புவை எடுத்த டச்சு நிழம்புனர் இயங்கிகொண்டிருக்கும் வெப்பமான பீரங்கி வாகனத்தின் அடியில் படுத்து உயிரை பணையம் வைத்து எடுத்ததுபிப்ரவரி 1, 1968, சைகோன், தென் வியட்நாம். தென் வியட்நாமிய தேசிய காவலர் ஒருவர் வியட் காங் போராளி ஒருவரை சுட்டுக்கொல்லும் காட்சிமே 1969 - வடக்கு அயர்லாந்து. பிரிட்டிஷ் படைகளுடன் சண்டைபோடும் கத்தோலிக்க இளைஞர் ஒருவர், காவலர்களின் கண்ணீர் புகை குண்டை சமாளிக்கும் விதமாக முககவசம் அணித்து சுவரில் "எங்களுக்கு அமைதி வேண்டும்" என்ற வாசகத்தை எழுதி, ஜெர்மன் நிழம்புனர்(photographer) ஒருவருக்கு காட்சியளிக்கும் படம் .டிசம்பர் 29, 1971, சார்ப்ருக்கேன், கிழக்கு ஜெர்மனி. காவலர்கள் மற்றும் வங்கி கொள்ளையர்கள் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டை .1972ஜூன் 8, திருன்க்பாங், தெற்கு வியட்நாம். அமெரிக்க குண்டுவீச்சுக்கு பயந்து கொத்தாக ஓடிவரும் சிறுமிகள் கூட்டம்செப்டம்பர் 11, 1973, சாண்டியாகோ, சிலி. நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட சல்வடோர் அலெண்டே, மாளிகையில் இராணுவ புரட்சி மூலம் கொல்லப்படும் சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்ட காட்சிஜூலை 1974 ல், நைஜீரியா. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள்.ஜூலை 22, 1975, போஸ்டன். பெண் மற்றும் சிறுமி தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கிழே குதிக்கும் காட்சிஜனவரி 1976, லெபனான். பாலஸ்தீன அகதிகள்.இந்த நிழம்புவை எடுத்தவர் முதல் பெண் நிழம்புனர் (First Lady Photographer) என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.ஆகஸ்ட் 1977. தென் ஆப்ரிக்கா காவல் துறை சட்டவிரோதமாக கட்டிய வீடுகளை இடிப்பதை எதிர்த்து போராடும் மக்களை இராணுவம் கண்ணீர்புகை குண்டுகள் வீசி விரட்டும் காட்சி.மார்ச் 26, 1978, டோக்கியோ- ஜப்பான். நரிட விமான முனையம் கட்டுமானத்தை எதிர்த்து தீக்குளிக்கும் நபர் ஒருவர்நவம்பர் 1979, தாய்லாந்து - அகதி முகாமில் உணவை வாங்க காத்திருக்கும் நேரத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையை தூங்க வைக்கும் காட்சி.ஏப்ரல் 1980. கரமோஜா மாவட்டம் உகாண்டா. 1980 உகண்டாவில் பட்டினியால் சாகப்போகும் ஒரு குழந்தை.இந்த நிழம்புவை எடுத்த நிழம்புனர் மிகுந்த மனவேதனை கொண்டு படத்தை 5 மாத காலமாக படப்போட்டியில் சேர்க்க மறுத்துவந்தார். பின் பல்வேறு காரணத்திற்காக போட்டியில் சேர்க்கப்பட்டு முதல் பரிசை இந்நிழம்பு வென்றதும் மிகவும் கோபப்பட்டார்.ஆனால் இந்த நிழம்பு வறுமை அதனால் ஏற்படும் உயிர் இழப்பை அப்பட்டமாக சொல்வது குறிப்பிடத்தக்கது.இராணுவ காவலர்கள் ஸ்பானிஷ் பாராளுமன்றத்தை கைப்பற்றிய காட்சி. இந்த நிழம்புவை எடுத்த நிழம்புனர் நிழம்புருளை (Photo Nagative) தனது காலணியில் வைத்து மறைத்து வெளியில் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 செப்டம்பர் 1982 பெய்ரூட் லெபனான் - கிறிஸ்டியன் பலன்சே என்பவரால் பாலஸ்தீனிய அகதி முகாம்களில் எரிந்த நிலையில் பிணமாக கிடக்கும் பாலஸ்தீனியர்கள்.30 அக்டோபர் 1983 - துருக்கி கிழக்கு - பூகம்பத்தில் இறந்த தனது ஐந்து சேய்களை பார்த்து கதறும் தாய்டிசம்பர் 1984 - போபால், இந்தியா. போபால் நச்சு வாயு கசிவில் உயிரிழந்த ஒரு குழந்தையின் உடல். இந்த நிழம்பு உலகின் தொழில்மயமான பேராசை குறிக்கிறது.நவம்பர் 16, 1985 கொலம்பியா - பன்னிரண்டு வயது ஒமைரா சான்செஸ் எரிமலை வெடிப்பால் உருவாக்கப்பட்ட இடிபாடுகளில் அகப்பட்டு, அறுபது மணி நேரம் போராட்டதிற்கு பின் தனது சுய நினைவை இழந்து இறந்தார்.செப்டம்பர் 1986 சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா - எச்.ஐ. வி தொற்று தோல் புண்களால் பாதிக்கப்பட்ட காபோசி என்ற நபர்.டிசம்பர் 18, 1987. குரோ , தென் கொரியா -ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்ததாக அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் தாயார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர் ஒருவரிடம் தன் மகனை விடுவிக்க கெஞ்சும் காட்சிடிசம்பர் 1988 சோவியத் - ஆர்மீனியா நிலநடுக்கத்தில் தனது 17 வயது மகனை இழந்த குடும்பத்தினர்1989 ஜூன் 4. பெய்ஜிங், சீனா -ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக அணிவகுத்து செல்லும் மக்கள் விடுதலை இராணுவ தாங்குகளை எதிர்த்து மறிக்கும் காட்சி .ஜனவரி 28, 1990 கொசோவோ - யூகோஸ்லாவியா சுயாட்சி நீக்கம் செய்ததை எதிர்த்து ஆர்பாட்ட பேரணியில் கொல்லப்பட்ட 27 வயதான எல்ஷன் நசிம் என்பவரின் இறுதி சடங்கிற்கு உறவினர்.பிப்ரவரி 1991 ஈராக் - போரின் இறுதி நாட்களில் அமெரிக்க சார்ஜென்ட் ஒருவர் தனது உயிர் நண்பரை போரின்போது இழந்து அவருடைய சடலம் பாலிதீன் பையில் அருகில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து துக்கம் தாழாமல் அழும் காட்சிநவம்பர் 1992 பார்ட்டர, சோமாலி. பட்டினி காரணமாக இறந்துபோன தனது மகனை புதைக்க இடம் தேடும் ஒரு தாயின் அவலத்தை காட்டும் காட்சி1993 ஆம் ஆண்டு மார்ச் பாலஸ்தீன பகுதிகள், காசா. பாலஸ்தீனியர்கள் தங்கள் குழந்தைகளிடம் துப்பாக்கி கொடுத்து இஸ்ரேலிய படையினரிடம் சண்டை போட பயிற்சியளிக்கும் காட்சிஜூன் 1994. ருவாண்டா - டுட்சி போராளிகளுடன் பேசியதாக சந்தேகிக்கப்பட்டு இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட ஒருவர்.1996: குய்டோ அங்கோலா. கண்ணிவெடி பாதிக்கப்பட்ட சிறார்கள். உள்நாட்டு யுத்தத்தின் போது நகரில் பல மக்கள் கொல்லப்பட்டதோடு காயமடைந்தனர்.23 செப்டம்பர் 1997. அல்ஜீரியா தலைநகர். பெந்தலா படுகொலையின் போது இறந்த தன் உறவினரின் உடல் ஜிமிர்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதை காண வெளியில் அழுதபடி கதறும் ஒரு பெண்.நவம்பர் 6, 1998 இஸ்பிகா கொசோவோ, யூகோஸ்லாவியா -போரின் போது ரோந்து பணியில் இருக்கும்போது கொல்லப்பட்ட வீரரின் விதவை மனைவிக்கு ஆறுதல் சொல்லும் சக வீரர்கள் மற்றும் உறவினர்கள்.ஏப்ரல் 1999 குக்கேஸ் அல்பேனியா - கொசோவோ வன்முறையில் காயம்பட்ட அல்பேனியா அகதி ஒருவர் அகதிகள் கூடும் இடத்திற்கு நடந்துவரும் காட்சி2000 டெக்சாஸ், அமெரிக்கா - மெக்சிகன் குடியேற்ற தாய்மார்கள் சமையல் செய்யும் காட்சிஜூன் 2001 பாகிஸ்தான் - இறந்துபோன ஒரு ஆப்கானிய அகதிக்குழந்தையின் உடல், இறுதி வணக்கத்துக்காக தயார்படுத்த படுகிறதுஜூன் 2002 கஸின் , ஈரான் - அப்பா பூகம்பத்தில் சிக்கி இறந்துவிட, அவரை புதைக்கப்பட்ட இடத்தில் கடைசியாக தன்னுடைய அப்பா அணிந்திருந்த பேண்டை தன்னுடன் வைத்து தகப்பனின் இறப்பை தாங்க முடியாமல் கதறும் சிறுவனின் உருக்கமான காட்சிமார்ச் 31, 2003 - தனது குழந்தையை ஆறுதல் படுத்தும் ஒரு ஈராக்கிய கைதிடிசம்பர் 28, 2004 இந்தியா - ஆழிபேரலையில் இறந்தபோன தன் உறவினரை கண்டு பெண் ஒருவர் கதறும் காட்சி1 ஆகஸ்ட் 2005. தாஹ்வா நைஜீரியா - இலவச உணவு வாங்க குழந்தையுடன் காத்திருக்கும் ஒரு பெண்ஆகஸ்ட் 15,பெய்ரூட் லெபனான் போர் முடிந்த முதல் நாள் இடிந்த தெருக்களுக்கு வாகனத்தில் வரும் இளம் யுவதிகள்.