இட்டது: ஜூலை 2nd, 2014, 12:40 am
by பாலா
phpBB [video]


விமானங்களிலிருந்து வெளியாகும் இரைச்சலே விமானத் தயாரிப்புக்களின் பிரதான பிரச்சினையாகக்காணப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில் பிரான்ஸை சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறவனமொன்று மின்சாரத்தில் விமானமொன்றை தயாரித்துள்ளது.

எயார் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இரண்டு ஆசனங்களைக் கொண்ட இலத்திரனியல் விமானத்தின் பரீட்சார்த்தப் பறப்பு வெற்றியளித்துள்ளது.விமானிகளின் பயிற்சி மற்றும் குறுகிய இடத்திற்கான பயணம் போன்றவற்றுக்குப் பொருத்தமான இந்த விமானம் 60 கிலோவட்ஸ் வலுவைக் கொண்ட இரண்டு இயந்திரங்களைக் கொண்டது. இதிலிருந்து எந்தவிதமான புகைகளும் வெளியாகாது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

விமானத்தின் இறக்கை 9.5 மீற்றர் நீளத்தையும் 6.7 மீற்றர் அகலத்தையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத இந்த விமானத் தயாரிப்பை வரவேற்றிருக்கும் பிரான்ஸின் சுற்றாடல் வளத்துறை அமைச்சர் எரிபொருளில் செயற்படும் விமானத்தைவிட குறைந்தளவு செலவே இதற்கு ஏற்படுவதாகவும் கூறுகின்றார்.

இந்த விமானத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு ஆசனங்களைக் கொண்ட விமானத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாக எயார் பஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜீன் பொட்டி தெரிவித்துள்ளார். பெரிய விமானங்களில் சக்தியை சேமிக்கக் கூடிய பாரிய இலத்திரனியல் இயந்திரங்களைப் பொருத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அவர் கூறுகின்றார்.

ஏனைய விமானங்களை செலுத்துவதைவிட இதைச் செலுத்துவது மிகவும் இலகுவானது என விமானிகள் தெரிவிக்கின்றனர்.