இட்டது: ஜூலை 2nd, 2014, 12:24 am
by பாலா
phpBB [video]


பூமியின் காலம் முடிவடைந்து வருவதாகவும் மனிதர்கள் தமது செயற்பாடுகளை மாற்றாவிட்டால் பாரிய விளைவை சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் டூக் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளரும் சுற்றாடல் நிபுணருமான பேராசிரியர் ஸ்டுவேட் பிம் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு மனிதர்களால் மேற்கொள்ளப்படும் தாங்கமுடியாத செயற்பாடுகள் காரணமாக பூமியின் சூழல் மாறி வருகிறது. இதனாலேயே புவி வெப்பமயமாக்கல் மீனினங்களின் அழிவு உயிரினங்களின் அழிவு போன்ற விடயங்கள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நாம் செய்துவதும் இந்த செயற்பாடுகளைத் தொடர்ந்தால் இந்நூற்றாண்டின் இறுதியில் பூமி பாரியதொரு பயங்கரத்தை எதிர்நோக்கும் என அண்மைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் ஒவ்வொரு பிராந்தியத்தின் கடல் மற்றும் நிலத்தின் தகவல்களைப் பெற்று ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

படிமங்களிலிருந்து பெறப்பட்ட பழையகால தகவல்களையும் தற்போதைய தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பூமியின் காலம் நெருங்கி வருவதாக பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

கடந்த 200 வருடங்களில் உலக கைத்தொழில்மயமாக்கல் மற்றும் இயற்கை அழிப்புக்கள் போன்றன கூடுதலாக இடம்பெற்றுள்ளன. பூமியில் வாழ்ந்த டைனோசர்கள் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் பலவற்றை இழந்துவிட்டோம். அழகிய இந்த கோளை நாம் அழித்தால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களையும் அனைத்தையும் இழந்துவிடுவோம் என்கிறார் அவர்.

சூழலைப் பாதுகாக்கக் கூடிய அறிவும் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கும் சூழ்நிலையில் எமது பூமியை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக அமைந்துள்ளது என்கின்றனர் சூழலியலாளர்கள்.