இட்டது: ஜூன் 25th, 2014, 12:27 pm
by கார்த்திவாசுகி
Image
சுவிட்ஸ்சர்லாந்தின் சூரிச் Seegräben என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் ஐரோப்பாவின் அதிக எடை கூடிய பூசணிக்காய் என்ற பெருமையை சூரிச் மாநிலத்தின் Neftenbach என்ற கிராமத்தில் விளைந்த பூசணிக்காய் தட்டிச் சென்றுள்ளது

பெனி மேயர் என்பவரால் விளைவிக்கப்பட்ட இந்த பூசணிக்காய் 768.5 எடை கொண்டதாகும். இது ஒரு மினி சிமாட் காரின் நிறையை விட அதிகம் என்று கூறப்படுகிறது . பிரான்ஸ் விவசாயியான மெஹ்தி தாவோ என்பவர் விளைவித்த 730 கிலோ எடைகொண்ட பூசணிக்காயே இதுவரை ஐரோப்பாவின் அதிக எடைகொண்ட பூசணிக்காய் என்ற பெருமையை பெற்றிருந்தது.

தற்போது அந்தப் பெருமையை தட்டிச் சென்றுள்ள சுவிஸ் விவசாயி பெனிமேயர் இம்மாதம் 14ம் திகதி ஜேர்மனியில் நடைபெறும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான ஐரோப்பிய வெற்றிக் கிண்ணப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மசூசெட்ஸ் மாநிலத்தில் கடந்த வாரம் நடத்த விவசாய கண்காட்சியில் ரான் வாலஸ், என்ற விவசாயி காட்சிக்கு வைத்த 911 கிலோ எடையுள்ள பூசணிக்காயே உலகின் அதிக எடை கொண்ட பூசணிக்காய் என்ற உலக சாதனையை பெற்றுள்ளது
Image