இட்டது: ஜூன் 15th, 2014, 11:14 am
by வேட்டையன்
பண்பலைகளில் Radio Jockey-களே முக்கிய பங்காற்றுகின்றனர். பெரும்பாலான பண்பலை நிலையங்களின் முன்னேற்றம் Jockey-யையே பெரிதும் சார்ந்துள்ளது. ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு Radio Jockey-களின் பணியில் சில மாறுதல்கள் இருக்கலாம். எனினும் Radio Jockey-யாக சில அடிப்படை தகுதிகள் உள்ளன. குறைத்தபட்சம் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இப்போது சில தனியார் பண்பலை நிலையங்களில் + 2 படித்தவர்களை கூட Jockey-யாக சேர்த்துக்கொள்கின்றனர். அந்த வரிசையில் இப்போது மசாலா எப் எம்-முடன் இணைந்து யா மேகூன் ஆட் நிறுவனம் நடத்தும் ஒரு பயிற்சி ஆரம்பமாகிறது.

Image


உங்க்ளுக்கு நல்ல குரல் வளமும், பேச்சுத்திறனும் இருந்து உச்சரிப்பும் சரியாக இருக்க வேண்டும். ஆனலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைதான் Radio Jockey-களும் பயன்படுத்துகின்றனர். இதனால் மொழிப்புலமையெல்லாம் அவசியமில்லை. அதே சமயம் பொழுதுபோக்கு துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். இப்போது பண்பலைகள் அதிகரித்து வருவதால் Radio Jockey -களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் கம்யூனிகேஷன் அண்டு புராட்காஸ்டிங் படிப்பு உள்ளது. சில கல்வி நிறுவனங்களில் Radio Jockey -களுக்கு சிறப்பு பயிற்சிகளும் உள்ளன. இரண்டு மாத சான்றிதழ் படிப்பில் இருந்து ஒரு ஆண்டு முதுநிலை படிப்பு வரை பல பிரிவுகளில் இது வழங்கப்படுகிறது என்றாலும் குறைந்த செலவில் நிறைவான பயிற்சியை யு.எஸ்.ஸில் இருந்து இயங்கும் மசாலா குழு கொடுக்கத் தயாராகி வருகிறார்கள் என்பதால் உங்கள் பெயரை உடனே பதிவு செய்து பயனடையுங்கள்!


நன்றி-ஆந்தை ரிப்போட்டர்