இட்டது: ஜூன் 11th, 2014, 11:59 am
by வேட்டையன்
Image
இன்போசிஸ் நிறுவனம், மூன்று ஆங்கில பத்திரிகைகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தில், முன்னணி மேலாண்மை குழுவில் இருந்த அதிகாரிகள் சிலர் நிறுவனத்தில் இருந்து பதவி விலகியுள்ளனர்.

இதையடுத்து புதிய தலைமை அலுவலரை நியமிக்க இன்போசிஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த முயற்சிகள் குறித்து விமர்சனம் செய்து சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்த செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இன்போசிஸ், அந்த பத்திரிக்கைகளுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மூன்று பிரபல ஆங்கில பத்திரிகைகளுக்கு இன்போசிஸ் சார்பில் மான நஷ்டமாக ரூ.2ஆயிரம் கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அம்மூன்று பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ள அறிவிக்கையில் ஆட்சேபத்துக்குறிய கட்டுரைகளை சுட்டிக்காண்பித்து, அதை இன்னும் 24 மணி நேரத்தில் நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


நன்றி-லங்கா சிறி