இட்டது: மார்ச் 21st, 2014, 9:00 am
by வேட்டையன்
Image

அமெரிக்காவில் நிர்வாகவியல் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சீனர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள நிர்வாகவியல் கல்வி மையங்களின் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் நிர்வாக வியல் பட்டதாரி அனுமதி கவுன்சில் 129 நாடுகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இதன்படி அமெரிக்காவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 97 சத வீதம் பேர் அந்நாட்டிலேயே பணி புரிகின்றனர். 3 சதவீதம் பேர் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்தியாவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 64 சதவீதம் பேர் இந்தியாவில் வேலை செய்வதையே விரும்பு கின்றனர். 23 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும் 2 சதவீதம் பேர் கனடாவுக்கும் செல்கின்றனர்.

ஆனால் சீனாவில் 48 சதவீ தம் பேர் சீனாவிலேயே பணிபுரிகின்றனர். 8 சதவீதம் பேர் ஹாங்காங்கிலும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வேலைக்குச் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்காவில் 38 சதவீத சீன நாட்டினர் வேலை வாய்ப்பைப் பெறுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் வேலை வாய்ப்பைப் பெறும் நாடுகள் விவரம்:

மெக்சிகோ (18%), ஜப் பான் (16%), ஜெர்மனி (15%), கனடா (15%), ஆஸ்திரேலியா (4%). ஆகும். ஊதிய விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள்தான் குறைவான ஊதியம் பெறுகின்றனர்.

இவர்களின் குறைந்தபட்ச ஆண்டு ஊதியம் 11,223 டாலராக உள்ளது. கனடாவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 75 ஆயிரம் டாலர்களை ஆண்டு ஊதியமாகப் பெறுகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாகவியல் மாணவர்கள் ஆண்டு ஊதியமாக 57 ஆயிரம் டாலரையும் பிரான்சைச் சேர்ந்த வர்கள் 52,991 டாலரையும், ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் 29,553 டாலரையும், சீனாவைச் சேர்ந்தவர்கள் 16,413 டாலரையும் பெறுகின்றனர்.


நன்றி-tamizhulagam.com