இட்டது: நவம்பர் 24th, 2017, 4:13 pm
by KavithaMohan
தேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
இன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..

1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.

2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.

3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.

4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.

5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.

6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.

7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
URL is hidden from guests, please register and login to view the hyperlink
நன்றி: IBC தமிழ்