இட்டது: ஜனவரி 30th, 2016, 3:46 am
by வேட்டையன்
Image

நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மூளிகைகளுக்கும் ஒவ்வொரு நோயைக் குணப்படுத்தும் குணமுண்டு. ஆனால் ஒரே ஒரு மூலிகை எல்லா மூலிகைகளைவிட உயர்ந்தது, அது எல்லா விதமான நோய்களைக் குணப்படுத்தும் / கட்டுப்படுத்தும் குணம் கொண்டது என்றால் நம்பமுடிகிறதா?. அதை இராச மூலிகை என்று சித்த மருத்துவத்தில் அழைக்கின்றனர், அதையே காயகல்ப மூலிகை என்றும் சித்தர்கள் அழைக்கின்றனர். காயகல்ப மூலிகை என்றால் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் இளைமையாக வாழ உதவும் மூலிகை என்று பொருள்.

அது என்ன மூலிகை?
எங்குக் கிடைக்கும்?
மிகவும் அரிதான மூலிகையா?
மிகவும் விலைகொண்ட மூலிகையா?

என உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். எங்கும் அலைய வேண்டாம், அது எங்கும் கிடைக்கும். நம்முடைய ஊர்களில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளிலும், தோட்டங்களிலும், சாலையோரங்களிலும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளிலும் பரவிக் கிடக்கும் குப்பைமேனி தான் நான் சொல்லும் அந்த இராச மூலிகை.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

- திருமூலர் (தேரையர் குணபாடம்)


எனத் திருமூலர் குப்பைமேனியை பற்றிப் பாடுகிறார்.

என்ன வியப்பாக உள்ளதா? பெயரைக் கேட்டால் இராச மூலிகை என்கிறார்கள், ஆனால் குப்பையில் கிடைக்கும் என்கிறார்கள் என்று தானே!. உண்மை தான், இது சாதாரண குப்பையில் வளருவதால் தான் இதன் மருத்துவ குணங்கள் நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இதை இன்றும் கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு நாட்டுமருந்து என்ற பெயரில் கொடுக்கின்றனர். இதைக் காயம், சளி, காய்ச்சல், இருமல், நஞ்சுக்கடி, வாதம், குடல்புழு, தலிவலி, மூட்டுவலி, மூலம் என மனிதனுக்கு வரக்கூடிய அனைத்து வகையான நோய்களுக்கும் இந்தக் குப்பைமேனியை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

குப்பையான(நோய் கொண்ட) மேனியை (உடம்பை) குணப்படுத்தும் மூலிகை என்பதால் இதற்குக் குப்பைமேனி என்ற பெயர் உண்டானதாகச் சொல்வார்கள். இவ்வளவு பெரிய மருந்தைப் பற்றி அக்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எவ்வித ஆயில்கள்(Laboratory) இன்றி எவ்வாறு கண்டுபிடிக்க முடிந்தது என்று ஒரு கணம் யோசித்தால் இது போன்ற மூலிகைகளின் மகத்துவம் புரியும், தமிழர்களாகிய நம்முடைய பெருமைகள் தெரியும்.