இட்டது: மே 29th, 2014, 6:50 pm
by வேட்டையன்
Image


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய அடுத்த நாளே, பாகிஸ்தானைச் சேர்ந்த இணையதளங்களை முடக்கும் கும்பல் ஒன்று, உத்தரப் பிரதேச அரசின் இணையதளங்கள் மூன்றை முடக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசின் http://www.tajmahal.gov.in, http://www.agrafort.gov.in, http://www.fatehpursikri.gov.in ஆகிய இணையதளங்களை பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் ஹாக்ஸர்ஸ் க்ரூ குழு முடக்கியுள்ளது. இணையதளத்தின் பக்கங்களை எதுவும் செய்யாமல், இணையதளத்துக்குச் சென்றவுடனே முகப்புப் பக்கத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை அதில் இடம்பெறச் செய்துள்ளது.

அந்தச் செய்தியில், பாகிஸ்தான் ஹோக்ஸர் க்ரு உங்கள் பாதுகாப்பை நினைவூட்டுகிறது. எங்கள் போர் எந்த ஒரு தனிநபருக்கு எதிரானது அல்ல. ஐபிசி 455வது சட்டம் 1860ன்படி இந்தியா என்றால் அது ஜம்மு காஷ்மீர் நீங்கலாக உள்ள பகுதிதான். உங்களுக்கு எச்சரிக்கை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகங்களை அதன் முகப்புப் பக்கத்தில் பதியவிட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அரை மணி நேரத்தில் அந்த இணையதளங்களை முடக்கி வைத்து, அதன் பாதுகாப்பு அம்சங்களை மறு பதிவு செய்து, கடவுச் சொற்களை மாற்றி அமைத்தது உ.பி. அரசின் இணையதளங்களைக் கையாளும் ப்ராஸிக்ஸ் இன்ஃபோடெக் நிறுவனம்.


நன்றி-தமிழ் நியூஸ் பிபிசி