இட்டது: மே 16th, 2017, 1:20 pm
by சாமி
வணக்கம்!

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.

தற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

சேர்க்கைக்கு தேவையானவை:-

1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)
3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)
3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)
5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,
6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) "தெய்வத்தமிழ் அறக்கட்டளை" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.

விண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-
DHEIVATHAMIZH ARAKKATTALAI
ACCOUNT No.: 3081 1753 788
STATE BANK OF INDIA
BRANCH: WEST SAIDAPETTAI, CHENNAI
IFSC CODE: SBIN0011720.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
மா.கருப்புசாமி - செயலாளர்,
தெய்வத்தமிழ் அறக்கட்டளை
9/1, மாஞ்சோலை முதல் தெரு,
கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கல்,
சென்னை - 600 032, தமிழ்நாடு
செல்பேசி - 94440 79926 / 95000 45865

தொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865
பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com