இட்டது: ஏப்ரல் 4th, 2017, 6:45 am
by அ.இராமநாதன்
-
கள்ளிப்பால் கதை கேளா காலமதில்
அய்ந்தாறு பெண்மலர்களானாலும்
ஆளுக்காள் ஆதரவாய்
அருமையாய் கதம்பமென
வளர்ந்ததொரு வசந்தம்
-
காடுமேடு ரசித்துலாவி
காணாத தேசம் வந்து
பார்த்து, பார்த்து கட்டிவச்ச
பளிங்கு மாளிகை ஒண்ணு
-
ஒத்த பிள்ளை பெற்று விட்டால்
ஓகோனு வாழ்ந்திட நினைச்சி
பெற்றதுதான் பெற்றதிங்கே
பெண்ணாக பிறந்திருந்தால்
அம்மானு அரவணைத்து,
ஆறுதலாய், கூட அழும்
-
புத்திரன் இல்லையென்றால்
மேலோக நரகமென்று
யாரோ சொன்னத நம்பி
பெற்று விட்ட புத்திரனோ...
-
நிலவைக்காட்டி காட்டி
சோறூட்டி வளர்த்ததினால்
நிலவையே கொண்டு வந்து
நடுவீட்டில் வைக்கச் சொல்லி
நித்தம் நித்தம் காட்டுறானே
பூலோக நரகத்தையே...
-
------------------------
-நா.சுப்புலட்சுமி
கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து