இட்டது: ஏப்ரல் 4th, 2017, 6:42 am
by அ.இராமநாதன்


திரைக்கடலோடி திரவியம் தேடு...’
திருப்பதியை,
தாரை வார்த்துவிட்டு,
கண்ணகி கோயிலை,
விட்டுக் கொடுத்து
ஆற்று படுகைகளை
வரைந்துப்பார்த்து
அய்யப்பனுக்கு
இருமுடிகட்டி
மிஞ்சியதை கோவிந்தா,
கோவிந்தாவென்று
கொண்டு போய்
உண்டியலில் கொட்டுவதால்
போன இடமெல்லாம்
தமிழன் சாகிறான்...
-
பவானி, பெரியாறு,
சோலையாறு, வெள்ளாறாய்,
கேரள எல்லையில்
...
பாலாறு, காவிரி
கர்நாடக எல்லையில்
-
கிருஷ்ணா, வடபெண்ணை
ஆந்திர முடிவில்
நமக்கான தாமிரபரணியும்
வைகையும் கை வையென
காய்நுது கிடப்பதால்
,’திரைகடலோடி திரவியம் தேடு’
-
-----------------------
-நா.சுப்புலட்சுமி
கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து