இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:09 am
by அ.இராமநாதன்
நமக்குள் வேண்டாம்
என்பது
அவசியம் வேண்டும்
என்று அர்த்தம்...
-
--------------------
-
நான் ஒளிந்து
கொள்ள
எத்தனித்தும்
இடமில்லை
பிரபஞ்சம் முழுவதும்
உன் பார்வை ஒளி...
-
------------------
-
உன் விழியோரம்
கசியும்
ஓரிரு கண்ணீர்த்
துளிகளில்தான்
என் முழு முகவரியும்
இருக்கிறது...
-
----------------
-
எனக்குத் தெரியாமல்
என்னுள் நுழைந்து
என்னைத்
தொலையச் செய்தாய்!
-
---------------------
-வி.அமர்நாத்
கல்கண்டு