இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:09 am
by அ.இராமநாதன்
உன்னை உனக்கு
முதலில் அறிமுகம்
செய்தது
நான்தான்...
-
------------------
-
என் பார்வைகளின்
பாரம் தாங்காமல்
வெட்கம்
உன்னை அணிந்து கொண்டது
-
---------------------
-
கண்கள் கொண்டு
நீ காயம்
செய்கிறாய்...
-
--------------------
-
நம்மை அணிந்து
கொண்டு
நிர்வாணம்
மறைத்தோம்
-
-----------------------