இட்டது: ஏப்ரல் 1st, 2017, 9:47 pm
by அ.இராமநாதன்

ரசிக்க நேரமில்லை
நாற்று பறிக்கும்
அவளின் கரங்கள்

கவித்துவன்

————————-

ஒரு குமட்டலோடுதான்
முதல் மடக்கு ஆரம்பம்
இன்று அதுவே தேவபானம்

கழனியூரான்

————————–

தள்ளாடும் குடிமகன்
தவணை முறையில்
வாழ்நாள் இழப்பு

இரா.இரவி

————————

சுமைதாங்கியின் சுமையை
உணர்வதேயில்லை
வழிப்போக்கர்கள்

ராஜநிலா

————————–

நள்ளிரவு தாண்டியும்
ஊர் அடங்கவில்லை
அடிக்குழாய் முற்றுகை

————————
படித்ததில் பிடித்தது